ட்டும் ட்டும் ட்டும் டும் டும் டும்
ஆம்பலும் அல்லியும்
குளங்களிலே படரட்டும்
அதற்காக மரங்களெல்லாம்
வானோக்கி வளரட்டும் ..
அருவிகளும் பொங்கட்டும்
ஆற்றுவெள்ளம் பெருகட்டும்
அதற்காக மரங்களெல்லாம்
வானோக்கி வளரட்டும் ..
வேளாண்மை செழிக்கட்டும்
வெள்வாலை நீந்தட்டும்
அதற்காக மரங்களெல்லாம்
வானோக்கி வளரட்டும் ...
கோடாரியை தொலைத்துவிட்டு
கடப்பாரையை கூர்மையாக்கு
மரக்கன்றை நட்டு நீயும்
மனிதத்தை வாழவிடு ....
=========^^^^^^^^^^^^==========
ஆளுமையில் ,
அரக்கர்கள் அழியட்டும்
சாணக்கியர் ஆளட்டும்
பெரியார்கள் வளரட்டும் -நாட்டின்கண்
பெருமை வந்து சேரட்டும் ...
ஒட்டுமொத்த குடிமகனும்
ஒருமனதாய் திருந்தட்டும்
மதுக்கடைகள் ஒழியட்டும்
மங்கையர் மனம் மகிழட்டும் ...
ஒழுக்கம் வந்து சேரட்டும்
கன்னியர்கள் மாறட்டும்
கழிவறை கலங்கமெல்லாம்
இன்றுமுதல் மடியட்டும் ...
திருடரெல்லாம் திருந்தட்டும்
திரும்பி வந்து வாழட்டும்
கறுப்புப் பணம் மீளட்டும்
கங்கை தூய்மை ஆகட்டும் ...
சண்டையெல்லாம் ஓயட்டும்
காவிரியும் பாயட்டும்
காடுகரை செழிக்கட்டும் -கணியன்
பூங்குன்றனின் வாய்மையென்றும் வெல்லட்டும் ....
அழுக்காறு அழியட்டும்
அன்பு மட்டும் பொங்கட்டும் .
எல்லை சண்டை ஒழியட்டும் -இந்தியா
ஏற்றம் மட்டும் காணட்டும் ....
பாதை மாறிய மானிடமே
பக்குவமாய் திரும்பு நீ -உன்
மனவலிமை சீற்றத்தை
மங்கிடாத காப்பாத்து .......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
