கண்பனிக்க அன்பு செய்குவாய் - மும்மண்டில வெண்பா - 3

மன்றாடு மண்டியிட்டு மன்றாடி மைந்தனைக்
குன்றாமல் கொண்டாடு குன்றாடும் கோமானை
வண்ணமுற தென்றமிழில் வாய்விட்டுப் பாடுநெஞ்சே
கண்பனிக்க அன்புசெய்கு வாய் .

மண்டியிட்டு மன்றாடி மைந்தனைக் குன்றாமல்
கொண்டாடு, குன்றாடும் கோமானை வண்ணமுற
தென்றமிழில் வாய்விட்டுப் பாடுநெஞ்சே கண்பனிக்க
அன்புசெய்கு வாய்,மன்றா டு .

மன்றாடி மைந்தனைக் குன்றாமல் கொண்டாடு
குன்றாடும் கோமானை வண்ணமுற தென்றமிழில்
வாய்விட்டுப் பாடுநெஞ்சே கண்பனிக்க அன்புசெய்கு
வாய்,மன்றா(டு) மண்டியிட் டு .

இலக்கண விளக்கம்
````````````````````````````````
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (14-Aug-15, 5:18 pm)
பார்வை : 66

மேலே