புலம்பல்
ஆயிரம் முறை பார்த்து
பார்த்து பெண் கட்டியும்
அடங்க மாட்டேங்கற
மாமியாருக்கு மருமக
மட்ச்சி வீட்டுல
எதிர் வீட்டுல அடுத்த
வேலைக்கே வழி இல்ல
அமைதியா போறா
தங்கமான மருமக...
பார்த்து பார்த்து கடை
கடையா ஏறி வாங்குன
கால் செருப்பு நாலு நாள்ல
பிஞ்சு போகுது,
அசால்டா வாங்கி வந்த
ரப்பர் செருப்பு மூன்னு
வருஷம் ஆச்சி இன்னும்
மாடா உழைக்குது
ஊருக்கெல்லாம் கொடுத்த
டிவி எல்லாம் நல்லா
தான் ஓடுது
எங்க வீட்டு டிவி மட்டும்
அலை அலையா
ஓடி தொலைக்குது...
நானும் அவனும்
ஒண்ணாதான்
வண்டி வாங்குனம்
ஏன் வண்டி மட்டும்
ஏன் அடிக்கடி செலவு
வக்கிது ..
சலிச்சி போன இந்த பேச்சி
தரணி எங்கும் கேக்குது
இது தரத்தோட குறைபாடா
இல்ல தகுதி இல்லாதவன்
குறைபாடா???
இப்படியும் வாழ்க்கை
ஓடித்தான் போகுது
அதிஷ்டத்தை குறை
சொல்லி அன்னாடை
நடுத்தர வாழ்க்கை