பத்து உண்மைகள்,

பத்து உண்மைகள்,
1.பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை.பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ இடம் இருக்கிறதா என்று பணத்தைக் கொட்டி ஆராய்ச்சி நடக்கிறது.
2.கையில் விலை உயர்ந்த கைக்கடிகாரம்.அதில் மணி பார்க்கக் கூட நேரமில்லை.
3.ஊருக்கு வெளியே பெரிய பங்களா,அதில் இருப்பதோ இரண்டு பேர்.
4.மருத்துவத் துறையில் பெரும் வளர்ச்சி.தினம் தினம் மருந்துகள் கண்டு பிடிப்பு.ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு.
5.பட்டப் படிப்பு பல இங்கே. பொது அறிவும்,உலக அறிவும் குறையுது இங்கே.
6.கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.
7.புத்திசாதித்தனமான அறிவுபூர்வமான விவாதங்கள் அதிகம்.உணர்வுபூர்வமான உரையாடல் எதுவும் இல்லை.
8.சாராயம் நிறைந்திருக்கு.குடிதண்ணீர் குறைந்திருக்கு.
9.முகம் தெரிந்த நண்பர்களை விட,முகம் தெரியாத முகநூல் நண்பர்கள் அதிகம்.
10.மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்க,மனிதம் சில இடங்களில் எப்போது விழலாம் என ஒட்டிக் கிடக்கிறது.

எழுதியவர் : பிதொஸ் கான் (15-Aug-15, 6:51 pm)
பார்வை : 89

மேலே