அச்சம்

அச்சம் என்பது மடமையடா
பல ரூபங்களில் விரட்டுமடா
உச்சம் ஏறி திரும்பி பார்த்தால்
அச்சம் உச்சம் கொள்ளுமடா
உச்சம் ஏறி சமமாய் பார்த்தால்
உற்சாக கிறுக்கு ஏற்றுமடா
உச்சம் ஏறி நிமிர்ந்து பார்த்தால்
பூமி மேல் காதல் பூக்குமடா
அச்சம் மனது வயப்பட்டால்
உச்சத்தை நிராசை ஆக்குமடா
அச்சம் கடந்து திரும்பி பார்த்தால்
துச்சமாக நமக்கு தோன்றுமடா