மீலாத தாகத்தில் பூமி
வெப்பமடைகிறதாம் பூமி -
நிலத்தடி நீர் அதல பாதாளத்தில் -
வெறுப்பில் விவசாயம்
சுருக்கே பரிகாரம் !
பயிரை வாழவைத்தவர்கள்
உயிரை மாய்துக்கொள்ளும் சோகம் -
பணமும் பாடும் பாழாய் !
விதைகள் விழுந்தும்
துளிர்விட ஈரமில்லை -
மரணத்தை நோக்கி மகசூல் !
மழைநீர் சுமந்த காகித ஓடம்
காற்றில் பறக்கிறது
காகித குப்பையாய் !
கரிசனம் காட்ட
கார்மேகத்திடம் ஈரமில்லை போலும் !
வானத்தை பார்த்தே நிலத்தோடு சேர்ந்து
வற்றிக்கிடக்கிறது விவசாயி வயிறும்
பாலைவனமாய் !
எலியும் குருவியும் சேர்த்த
இருப்பு உணவை கூட
திருடி தின்கிறது அகோர பசி !
மரங்கள் மடிந்து மாசு பெருகி
வானத்தில் மேகம் தொலைந்து போனதாகவே -
மனிதன் இன்னும் மாறாமலேயே !
கற்கள் வித்தை இனி காகத்திற்கு மட்டும் இல்லை
இனி மனிதனுக்கும் தான் !
கற்களும் குடமும் காத்துகிடந்தும்
காகம் குடிக்க நீர் மட்டும் இருக்காது !
சிந்திப்பீர் என் இதயபூர்வ சொந்தங்களே !