அம்மாக்கள் - கற்குவேல் பா

அம்மாக்கள்
``````````````````

நீ
அம்மா பிள்ளையா
அப்பா பிள்ளையா
என்ற கேள்விக்கு

99.9% பதில்
அம்மா பிள்ளையாகத்தான்
இருந்திருக்கும் !

* * *

மாதா
பிதா
குரு
தெய்வம் - யார் சொன்னது ?

மாதா
பிதா
குரு
" மாதா " - என்பதே சரி !

* * *

அவள் பாடிய
தாலாட்டு மெட்டுக்கு
மயங்கியே

இன்றுவரை
நிற்காமல் இயங்குகிறது
நம் இதயம் !

* * *

பிள்ளை
ஒருவேளை உணவு
அருந்தாமல்
தவிர்த்தாலும்

அவளுக்குள்
உலகமே
அழியப்போவதாய்
எண்ணம் !

* * *

அப்பா
கேட்கும்போது
சண்டையிட்டு
மறுத்தவள்

பிள்ளைக்கு
என்று வரும்போது
தாலிச் சங்கிலியையும்
அவிழ்த்து
கொடுத்துவிடுகிறாள் !

* * *

எல் .கே . ஜியில்
தன் குழந்தை
முட்டை வாங்கிய
தேர்வுத்தாள்களே

அவளுக்கான
விலை மதிப்புமிக்க
பொக்கிசங்கள் !

* * *

முதியோரில்லத்தில்
தன்னை கொண்டு
சேர்த்தால்கூட

பிள்ள
" சாப்டுச்சோ இல்லையோ "
என்பதே அவளது
கவலையாக இருக்கும் !

* * *

அவளது
அன்பிற்கும்
எல்லையுண்டு

தன் பிள்ளையின்
பிறப்புமுதல்
அவள் இறப்புவரை !


- கற்குவேல் .பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (17-Aug-15, 12:12 pm)
பார்வை : 167

மேலே