கஜல்- 13

அன்றாடம் நான் உன்னோடு வாழ்வேன்
சொன்னால் கேட்க்கும் மூச்சோடு வாழ்வேன்

நான் யாரும் காணா காட்சி காண்பேன்
பாஷை பேசும் கண்ணோடு வாழ்வேன்

எங்கெங்கும் என்றென்றும் செழிப்பேன்
உன்னால் தான் நான் என்னோடு வாழ்வேன்

ஓர் மேன்மை மிஞ்சும் செய்தி சொல்வேன்
மெய்யாய் நிற்கும் சொல்லோடு வாழ்வேன்

என்னுள் பூந்தென்ரல் வீசுதேனோ?
மின்னும் நல் வாசத்தோடு வாழ்வேன்

ஜாலம் ஏதோ லீலை நிகழ்த்தும்
நீலம் நான்தான் விண்ணோடு வாழ்வேன்

என் ஓசை காலத்தை மனக்கும்
ரோச்சிஷ்மான் நான் பண்ணோடு வாழ்வேன்

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (17-Aug-15, 4:17 pm)
சேர்த்தது : ரோச்சிஷ்மான்
பார்வை : 74

மேலே