சொல்ல துடிக்குது காதல் மனசு 555

பெண்ணே...

உன்னை தொடரும்
உன் நிழலை போல...

உன்னையே தொடர்ந்துவர
தெரிந்த எனக்கு...

வாய்விட்டு உன்னிடம் என் காதலை
சொல்ல தெரியவில்லையடி...

கடிதத்தில் உனக்கு
சொல்லலாம் என்று...

உனக்காக நான் எழுதிய
காதல் கடிதங்களைவிட...

எழுத நினைத்து வார்தைக்களுகாகவும்
கையெழுத்துகாகவும்...

கசக்கி எறிந்த காகிதமே
அதிகமடி...

அழகான இடத்தில அமர்ந்து
கவிதை எழுத முயற்சித்தும்...

சில நிமிடங்களில் என்னை
சுற்றி குப்பையாக மாறிவிடுதடி...

நான் கசக்கி எரியும்
காகிதங்களால்...

அந்த நிமிடங்களில் தான் நீ
என்னை கடந்து செல்கிறாய்...

குப்பை நடுவே என்ன செய்கிறேன்
என்று சிறு புன்னகையோடு...

நீ செல்ல உன்னை
தொடர்ந்தே வருகிறேன்...

நான் தினம் தினம்...

நாளை உன் கரம் பிடித்து
நான் தொடரவேண்டும்...

சொல்ல துடிக்கும்
காதலுக்காக உன்னையே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-Aug-15, 4:09 pm)
பார்வை : 783

மேலே