சற்றுன் முகம் சிவந்தால்
எனது கவிஞன் சொன்னது உண்மையே
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி நேரமும்
ஒரு நாழிகையாய் கழிந்தது
என்னோடு நீ பேசிய மௌனமே
மிகப்பெரிய கவிதையை தெரிந்தது
உலகத்து பூக்கள் எல்லாம் உனக்கே என நினைத்தேன்
உன் விழி பார்த்து நானும் ஒரு பூவென மலர்ந்தேன்
வெட்கம் நானம் என்பது பெண்களுக்கே உரியது
அதனை
ஒரு ஆண் கொண்டதை உன்னால் நான் உணர்ந்தேன்
ஐந்து மணிநேரம் அரை மணிநேரம் ஆனது
உன் விழி பார்த்த நேரத்தில் என் அரை ஆயுள் போனது
உன்னை பிரியும் நேரத்தில் சற்றுன் முகம் சிவந்தால்
என் மனம் சஞ்சலம் கொள்ளுமடி
-த.மா.ச.கவிதாசன்