இவனுக்கு ஓர் கனவு வந்தது

கனவில் பாரதி,திலகர், இராமலிங்க அடிகள், காந்தியிடம் கேட்கிறேன்

முண்டாசு கவிஞனே..முறுக்கு மீசைக்காரனே..
உனக்கோ.
“”என்று தணியும் இந்த சுதந்திர தாகம்..
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்””

ஆனால் எம் குலப்பெண்களுக்கோ
“”என்று தணியும் இந்த பெண்ண்டிமை தாகம்””
“”என்று மடியும் ஆண்கள் காமத்தின் மோகம்””
என் மகாகவியே..
புத்தகத்தின் முன்பக்கத்திலோ
“”சாதிகள் இல்லையடி பாப்பா
குலம்தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்””
என்று உன் பாட்டு..
ஆனால் என் பள்ளிப்பாட்டோ
“”சாதிகள் வேணுமடி பாப்பா
குலம்தாழ்த்தி உயர்த்தி சொல்லல் லாபம்””

அறிவில் பெரியவரே..
வயதில் முதியவரே..
பாலகங்காதர திலகரே
பொய்யுரை உரைத்தது உம் வாக்கு
“”சுதந்திரம் எனது பிறப்புரிமை”” என்று
“”நிரந்தரம் மதுஉன் குடியுடைமை”” என்று
மெய்உயிரை உலைக்குது இம்மன்னவ நாக்கு

நாமக்கல் கவிஞனே..இராமலிங்க அடியனே..
ஒன்று மட்டும் நன்று சொல்வேன்
இது நிச்சயமே...
குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே
சிக்கனில்லை மட்டனில்லை தின்னும் ஆசையில்லையே
மண்டலத்தில் கண்டிராத சண்டையன்று புதுமையே
(ஊழல்)கண்டதில்லை (லஞ்சம்) கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி
என்று மட்டும் நின்று சொல்வாய்
இது சத்தியமே

கண்ணில் ஏன் இந்த கோபம்??
மனதில் ஏன் இந்த வெறி??
வார்த்தையில் ஏன் இந்த அவமரியாதை??
என்று கேட்டார் என் தேசப்பிதா..

அது நீர் வாங்கிகொடுத்த சுதந்திரம் இக்கணமாம்
அது எனக்கு ஞாபகம் வந்ததும் இக்கணம் தான்.
சுதந்திரம் எனது பேச்சுரிமை என்று கூறி
இவன் பார்வை வெறித்து,கனவை முறித்து
இக்கண்கள் விழித்தன

எழுதியவர் : ஆறுமுகப்பெருமாள் (17-Aug-15, 9:38 pm)
சேர்த்தது : ஆறுமுகப்பெருமாள்
பார்வை : 450

மேலே