கடிதம்

இதோ.......!!!

இதுதான் என் கடைசிக் கடிதம்

என்னை காதலிக்கவில்லை என்றால்,

என்னை நீ உயிரோடு

பார்க்க முடியாது.

விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதே

என் நூறாவது கடிதம் என்று,

இம்முறை நான்

உயிரை விடப் போவது நிச்சயம்.

நகலின் பிரதியொன்றில்

நூறு என்ற எண்னை மட்டும்

இடைவெளியில் பூர்த்தி செய்து

அனுப்பி வைத்தான் ஒருவன்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (17-Aug-15, 9:34 pm)
Tanglish : kaditham
பார்வை : 68

மேலே