சுதந்திரம்

எப்படியோ பெற்றதில்லை சுதந்திரம்


இந்தியனில் பெருமை கொள்வோம் சுதந்திரத்தை போற்றுவோம் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் .உண்மையில் சுதந்திரம் என்பது என்ன??
கருத்து சுதந்திரம் என்றபேரில் கண்டதை திரைபடமாக்கும் சினிமாவிலா ??
எழுத்து சுதந்திரம் என்று ஓருவரின் இழப்பை எதுகை மோனையில் போடும் பத்திரிகைகளில்லா??
பேச்சு சுதந்திரம் என்று அவையச்சம் இல்லாமல் மேடை நாகரிகம் இல்லாமல் பேசுவதிலா???
நிச்சயம் இல்லை
ஆடை அணிவதில் தொடங்கி தெருவோரம் குப்பை கொட்டுதல் ,எச்சில் துப்புதல் என சுதந்திரத்தை மிகையாக்கி கொள்வதிலா??? இது இருக்க கல்லூரிகளில் அரசியல் பேச உரிமை இல்லை எனில் எங்கு போனது கருத்து சுதந்திரம் ? தனக்கான படிப்பை தானே பெற முடியாத படித்த பெற்றோர்கள் உள்ள வீட்டில் எங்கு சென்றது ?? அலுவலக மேலதிகாரியின் அர்த்தமற்ற அதட்டலுக்கு அடிபணியும் போது அழிந்தது சுத்த சுதந்திரம்
.சாதி மத பேத கொண்டு சில அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போதும் . போரட்டங்களில் நன்மை தரம் உணராமல் போரளிகளை ஓடுக்கும் போதும் எங்கு போனது என் சுதந்திரம் .??

அரசியல் ,பணம், அதிகாரம் .என பலவை நம் சுதந்திரத்தை பரிப்பது இருக்கட்டும் நாம் நம் சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதிலே சுதந்திரத்தின் உண்மை ஆனந்தம் உள்ளது ..

#எப்படியோ_பெற்றதில்லை_சுதந்திரம்_அதனால்_எப்படிவோனுமானாலும்_பயன்படுத்தாதே

சுதந்திரத்தின் பெருமையும் ஆனந்தத்தையும் அதை அனுபவிப்பதிலே உள்ளது

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

#பாலா

எழுதியவர் : பாலா (17-Aug-15, 10:17 pm)
சேர்த்தது : ஹைக்கூ தாசன்
Tanglish : suthanthiram
பார்வை : 2133

மேலே