ஹைக்கூ தாசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹைக்கூ தாசன்
இடம்:  thiruvannamalai
பிறந்த தேதி :  05-Nov-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Sep-2013
பார்த்தவர்கள்:  578
புள்ளி:  105

என்னைப் பற்றி...

புதுமை விரும்பி ...
கவிதை ரசிகன் .....
தமிழ் மகன்...

என் படைப்புகள்
ஹைக்கூ தாசன் செய்திகள்
ஹைக்கூ தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2017 7:00 pm

ஆம் அவனோடு சண்டையிடுவேன்....

சைக்கிள் மிதிப்பேன்...
நுங்கு வெட்ட செல்வேன்... பின் நுங்கு வண்டி ஓட்டி ரோட்டை அளப்பேன்

அவனோடு மட்டை பத்து அடிப்பேன்.. அவன் மட்டை ஆனா போது தோள் கொடுத்து நடப்பேன்...

சட்டை மாற்றி உடுபேன் -சில சமயம்
சாட்டை கொண்டு வெளுப்பேன்...

சில சமயம் பங்கு என்பேன்..
சில சமயம் மச்சி என்பேன்.. பல சமயம் சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள் தான் அவன் பெயராக இருக்கும்..

தம் அடிக்கும் போது வெளிய போடா நாயே என்பேன்..
தண்ணி அடிக்கும் போது சைடிஷ் பிடுங்கி தின்பேன்...

அவனோடு அதிகம் போட்டோ எடுப்பேன்..
Facebook playboy போஸ்ட் எல்லாம் அவனையே டேக் செய்வேன்...

பைக் ல போகும்

மேலும்

உங்கள் கவிதை எதார்த்தமாக உள்ளது கண் முன்னே வாழ்வதை போன்று 03-Oct-2017 10:46 pm
உண்மைதான்.., நாம் எங்கு நட்பை தொடங்கியமோ அங்கிருந்து பல நண்பர்கள் வாழ்க்கையை தொடங்குகிறார்கள் நாம் எங்கு வாழ்க்கையை நிறைவு செய்கின்றோமோ அங்கிருந்து சில நண்பர்கள் நட்பை தொடங்குகின்றனர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Oct-2017 10:28 pm
ஹைக்கூ தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2017 6:59 pm

எனது கிரிடங்கள் அடகு வைக்கப்படுகிறது... ஒற்றன்களுக்கு சம்பளம் தர ..

மேலும்

ஆடம்பர வாழ்க்கை அத்தியவசியத்தை மறைத்து விடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Oct-2017 10:23 pm
ஹைக்கூ தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2017 6:55 pm

எல்லோரும் நீல திமிங்கலம் விளையாட்டின் அடிமைகள் தான்...
உயிரை விடுங்கள் என்ற கட்டளை நம் அட்மின்களிடம் இருந்து இன்னும் வரவில்லை ... அதற்கு நிகரான அனைத்து டாஸ்க் களையும் நித்தம் நாம் முடித்து கொண்டிருக்கிறோம் ...

அந்த அட்மின் சில நேரம் அன்பை பரிசோதிக்கலாம் ..

சில நேரம் நம் சுய மரியாதையை ...
சில நேரம் நம் தன்னபிக்கையை ....
சில நேரம் நம் முட்டாள்தனத்தை ...
சில நேரம் நம் கொள்கைகளை...
பல நேரம் நம் செல்வ செழிப்பை...

எல்லா டாஸ்க் களையும் முடித்து அடுத்த நிலைக்கு தாவ எத்தனிக்கிறோம்

பள்ளி பருவங்களில் அட்மின்கள் ஆசிரியர் .. மற்றும் பெற்றோர்களின் வேடமணிந்து வருகின்றனர்...

கல்லூரிகளில் க

மேலும்

உண்மைதான்.., மரணத்திலும் இலாபம் உண்டு என்பதை அறிந்த சில உள்ளங்கள் உயிரை கொல்வதைக் கூட பொருட்டாக நினைக்கவே இல்லை. அவலம் நிறைந்த உலகில் பாவங்கள் தான் இன்று நிரந்தர முகவரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Oct-2017 10:22 pm
ஹைக்கூ தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2017 6:48 pm

ஓடி ஒளிய முடியாத ...
பக்க துணை யாருமற்ற...
ஒரு கடற்கரை மணலில் ...
கோடி முத்தங்களை ஒரு சேர பொழிந்து எனை ஆட்கொண்டது இம்மழை...

கையும் களவுமாய் சிக்குண்ட ஒரு கள்வன் போல..

கடைசி ஆயுதத்தை இழந்த ஒரு போர் வீரன் போல

தங்கையின் சமையலை உண்ட அண்ணன் போல ..

யாதொன்றும் செய்யா இயலாமல் முத்து (முத்த ) மழைதுளிகளுக்கு அடிமையாகி போனேன் ....

குளிப்பதற்கு கடலில் களிப்பதற்கும் இல்லாத ஒரு ஆனந்தம் நனைவதில் உள்ளது ..

மற்றவைகளில் நீரை நாம் தேடி போவோம்.
நனைவதில் மட்டும் நீர் நம்மை தேடி வரும்

திருமண அட்சதை போல ..
அன்பு தங்கை இன் கொட்டு போல ..
பிறந்த நாள் முட்டை போல..
தலை தொட்ட நண்பனின் பாராட்டை

மேலும்

தூறல்களின் வருகை உள்ளங்களை மாயம் வைத்து கொள்ளை கொள்கிறது. குளிர் எனும் வசந்த கால இன்பத்தை காற்றின் வருகை தேகம் எங்கும் அருவிகள் போல மேயவிடுகிறது இயற்கையின் அழகில் மனிதனின் மனம் கைக்குழந்தை போல உளறுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Oct-2017 10:18 pm
ஹைக்கூ தாசன் - விக்னேஷ் பழனி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2017 9:36 am

அடுத்த தலைமுறையில் கவிதை எழுதும் பழக்கம் வளருமா அல்லது குறையுமா ?

மேலும்

எனது ஐயமே அதுதான் நண்பா 12-Jan-2017 6:49 pm
உண்மைதான் 12-Jan-2017 6:48 pm
கவிதை எழுதுவார்கள். ஆனால் தமிழில் எழுதுவார்களா ? 10-Jan-2017 10:32 pm
நிச்சயம் வளரும்... 10-Jan-2017 8:53 pm
ஹைக்கூ தாசன் - ஹைக்கூ தாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 8:26 pm

என் வெல்லக்காரி
இருதய கொள்ளகாரி
கண் எனும் வில்லுக்காரி
தேன் சுவை சொல்லுக்காரி
நிலம் கொண்ட வெள்ள நிலக்கரி

மேலும்

நன்றி நண்பா 22-Nov-2016 6:31 pm
சந்தத்தில் பாடும் மெய்யழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 9:21 am
ஹைக்கூ தாசன் - அருண்ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2015 4:18 pm

மாட்டு கறி உடலுக்கு நல்லதா ??

மாட்டு கறி உண்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா .??

மாட்டு கறி ஒரு கிலோ எவ்வளவு இருக்கும் ??

மாட்டு கறி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கேள்வி .??

மேலும்

"மாட்டு கறி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கேள்வி" ஹிஹிஹி இது கேள்வியல்ல நீங்கள் சொல்வதை நேரடியாகவே சொல்லலாம்... 1) மாட்டு இறைச்சி அல்ல எந்தவிதமான சிவப்பு இறைச்சி வகைகள் "அதிகம்" சாப்பிட்டாலும் கொலஸ்ட்ரோல் மலக்குடல் புற்று நோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம்.. 2) அதே நேரம் அனைத்துவித படைப்புகளும் நன்மை தீமை என இருகுனங்களையும் உடையது... 3) வாரத்தில் இருநாள் மாட்டு இறைச்சி சாப்பிடும் பொது மீதி 5 நாள் பீன்ஸ் வகை மீன் வகைகள் மற்றும் நட்ஸ் வைகல் சாப்பிட்டு வந்தால் எப்பாதிப்பும் வராது. 4) மீன் கட்டாயம் சாப்பிட படவேண்டிய ஒன்றாகும் அது நம்மை இதய நோயில் இருந்து பாதுகாத்து வருகின்றது... 5) செல் பிஷ் வகைகள் தவித்தல் நன்று " நண்டு கணவாய் இறால் மட்டி" போன்றவை... 6) பன்றி இறைச்சி 100% முற்றாக தவிக்க வேண்டும்... குறிப்பு:- உலகில் மாட்டு இறைச்சி விற்பனையில் இந்தியா ஒரு முன்னி நாடு... வருடம் ஒன்றுக்கு 2,082,000 மெட்ரிக் தொன் அதாவது 2,082,000,000 Kg களை ஏற்றுமதி மட்டும் செய்கின்றது........ மாட்டு இறைச்சியை விரும்ம்பி உண்ணும் அமெரிக்க வருடம் ஒன்றுக்கு 1,035,000 மெட்ரிக் தொன்களை உற்பத்தி செய்கின்றது..... 14-Dec-2015 12:39 pm
மாட்டுக்கறி பற்றிய தங்களின் கேள்வியின் நோக்கம் உங்களின் நான்காவது கேள்வியில் உள்ளதென்று நினைக்கிறேன். விழிப்புணர்வு ஏற்படும்படியான உங்களின் கேள்விக்கு நன்றி. ஒவ்வொரு கேள்வியாக பார்போம். மாட்டு கறி உடலுக்கு நல்லதா ?? உலகில் உள்ள எந்த பொருளும் மிகவும் கெட்டதும் இல்லை மிகவும் நல்லதும் இல்லை. இவ்வகையில், முதலில் நல்லதை பார்போம் .கொழுப்பினை சுரண்டி சாப்பிடும் காசநோய் ஏற்படுத்தும் உயிரியால் பாதிக்கப்பட்ட மக்கள் மாட்டுக்கறி சாப்பிடவேண்டும், இதனால் இழக்கும் கொழுப்பினை ஈடு செய்யமுடியும், மேலும் வலு இழக்காமல் தடுக்கும். அது தவிர, ஆண்மை குறைவுள்ள ஆண்கள் இந்த கறியை சாப்பிட்டால் அவர்களின் விந்தணு உற்பத்தி, ஆண்மை குறைவு சரியாகும், இக்கறியில் உள்ள ZINC ஆண் தன்மைக்கான ஹார்மோனை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகிறது. மாட்டு கறி உண்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா .?? இதன் தீமையை பார்த்தால், மாட்டுக்கறி சிவப்பு மாமிச வகையை சார்ந்தது. எனவே இதனை சாப்பிட்டால் நிச்சயம் மலக்குடல் புற்றுநோய் வரும். மாட்டு கறி ஒரு கிலோ எவ்வளவு இருக்கும் ?? இந்த கேள்வி விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாக தெரியவில்லை. மாட்டு கறி வாங்கும் இடத்தைப் பொறுத்து விலை மாறுபடும். மாட்டு கறி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கேள்வி .?? இது கேள்வியாக தெரியவில்லை, மாறாக மேற்கண்ட கேள்விகளின் நோக்கமாக தெரிகிறது. 31-Oct-2015 2:19 am
மாடு முதலில் தெய்வமாக வணங்கப்படும் oru வீட்டு விலங்கு , பொறுமைக்கும் அமைதிக்கும் வீரத்திற்கும் அன்பிற்கும் தாய்மைக்கும் அற்ப்புதமான எடுத்துக்காட்டு , பொதுவாக எந்த உயிரினத்தையும் கொன்று உண்பது விலங்குகள் , நம்மை எந்த லிஸ்டில் சேர்துவது ? இருக்கட்டும் , மாடிரைச்சியல் புரதங்கள் அதிக அளவில் உள்ளன , இப்படிப்பட்ட நல்ல குணம் கொண்ட அணைத்து விலங்குகளையும் நாம் உண்பதில்லை . வளர்க்கப்படும் மாடுகள் கொள்ளப்படின் அவற்றயும் காட்டுக்குள்ளே அனுப்பி விடுங்கள் . பொதுவாக NV வேண்டாம் , 27-Oct-2015 11:01 pm
மாட்டு கறி உடலுக்கு நல்லதா ?? பால் கொடுக்கும் பசு மாடு தாய்க்கு இனையான ஓர் உயிராகம் அதன் இனத்தை சார்ந்த எந்த ஒரு மாட்டையும் கறியாக்கி உண்பது பெற்ற தாயை உண்பதற்கு இனையானதாகும். மாட்டு கறி உண்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா .?? மாட்டு கறிதனில் அளவிற்கு அதிகமாக கொழுப்பு சத்து உள்ளது. மாட்டு கறி ஒரு கிலோ எவ்வளவு இருக்கும் ?? நான் எந்த ஒரு விலங்கின் கறியையும் உண்ணாததால் எனக்கு அதன் விலையை பற்றிய தகவல்கள் தெரியாது. மாட்டு கறி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே என் தனிப்பட்ட கருத்துகளை கூரியுள்ளேன். இவை எவரையேனும் புன்படுதுவதாக இருப்பின் அத்தவறினை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 27-Oct-2015 12:35 pm
ஹைக்கூ தாசன் அளித்த கேள்வியில் (public) vellurraja மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Oct-2015 9:00 pm

வேலை இல்ல திண்டாட்டம் பற்றி குறிப்பாக தமிழக பொறியியல் பட்டதாரிகளின் நிலை பற்றிய உங்கள் கருத்துகளை பகிருங்கள் .

மேலும்

more production........less demand...that is the problem. 28-Feb-2016 3:42 pm
கருது கூறிய அணைத்து தோழமைகளுக்கும் மிக்க நன்றி ,,, இதை (பொறியியல் ) வெறும் பேராசை என்று ஒற்றை வரியில் சொலிவிட முடியாது ... பகட்டுககவும் திருமண பத்திரிக்கையில் பெயர் பின் சேர்க்கவும் படிப்பவர்கள் களாலே அதன் மதிப்பும் உன்னதமும் குறைந்து விட்டது ... பத்தாததற்கு படிப்பை பணமாக்க நினைக்கும் பணக்காரர்கள் அதிகம் பணம் ஈட்டும் பொறியியல் கல்லூரிகளை கட்டி அதன் மதிப்பை சுழி ஆகிவிட்டர்கள் .... விளைவு அணைத்து மாணவனையும் பாதிக்கிறது ,,... இந்த நிலை மாறு ம் வரை .வேலை இல்ல திண்டாட்டம் தொடரும் 25-Oct-2015 3:28 pm
என்பதை = என்பது 25-Oct-2015 7:34 am
வேலை இல்லா திண்டாட்டம் என்பதை பொறியியல் பட்டதாரிகளுக்கு மட்டுமில்லை. இந்த திண்டாட்டம் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும். அரசு அலுவலகங்களில் நிறைய பணியிடங்கள் நிரப்பப் படாமல் காலியாகவே இருக்கிறது. ஓய்வு பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அரசு அலுவலகங்களில் பணி நியமனம் என்பது அத்திப் பூவாகிவிட்டது. இருப்பவர்களிடத்திலேயே இருவர் பணி, மூவர் பணி என்று சுமத்தப்பட்டு, அரசு அலுவலகத்தில் நிறைய துறைகளில் மூச்சுத் திணறலில் தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிறைய அரசுப் பணியாளர்கள் வர இருக்கும் ஊதிய உயர்வினை (Pay Commission) எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். சம்பளம் உயர்ந்தவுடன் அந்த சலுகைகளைப் பெற்றுக் கொண்டு பணியை துறக்க துணிந்துவிட்டார்கள். காரணம் குறைந்த பணியாளர்களிடத்தில் அதிகப் படியான வேலை சுமைகள் நிமிர முடியாமல். ஊதிய உயர்வினை தொடர்ந்து பணியாட்கள் குறைகின்றபட்சத்தில் அரசாங்கம் பணி சிக்கல்களை நிச்சயமாக சந்திக்கும். இந்த நிலையில் நிறைய பேர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பணி மூப்பு அடைய சொற்ப ஆண்டுகளே உள்ள பணியாளர்கள் வெளியேறிவிடும் எண்ணத்தில் இருப்பதால் புதிதாக பணிக்கு அமர்த்தப்படுபவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் சிக்கல்கள் வரலாம். இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. உயர் பதவியில் இருந்து ஓய்வு பெரும் நிலையில் இருக்கும் பட்சத்தில் நிறைய அதிகாரிகள் தங்களின் அதிகார பலனை வைத்து தங்களின் பணிக்காலத்தை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்து கொள்கிறார்கள் என்பது மிகக் கொடுமை. வயதானவர்கள் இப்படி தங்களின் பணியை நீட்டித்துக் கொண்டிருந்தால் இளைஞர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்..?? அரசாங்கமும் இந்த பணி நீட்டிப்பிற்கு அனுமதி அளிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கு ஒரு விடிவு கிடைக்கும் என்றே நினைக்கிறேன். 25-Oct-2015 7:32 am
ஹைக்கூ தாசன் - ஹைக்கூ தாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2014 3:54 pm

நிலவென்று யாரடி பெண்ணை சொன்னது -அந்த
நில்லாவே உன் நிழல் தானடி

எட்டு மணி தூக்கம் இன்று இல்லாமல் போச்சுதடி
விட்டு வைத்த தாடி இன்று விதவிதமாய் ஆச்சுதடி

கதை கேட்கும் குழந்தை போல உன் குரல் கேட்க்க ஆசைப்பட்டேன் -கதை
சொல்ல வேண்டாம் கண்ணே உன் கண் சிமிட்டல் போதுமடி

விரல் நீங்கும் நகத்தின் துயரம் விரல் அறியா !
விழி அறியும் -உன்
விரல் தொட ஆசைபட்டேன் வழிகாட்டு தமிழச்சியே !

நோட்டவில் போட்ட ஓட்டாய் நீ என்னை நோக்கமல் போகும் பொது -பாட்டு உன்னையும்
பாட்டில் என்னையும் கேட்குதடி


குறிப்பு -இப்படைப்பு நான் ஒரு குரும்படதிற்காக எழுதிய பாடல்
படித்து நிச்சயம் கருத்து பதிய

மேலும்

நன்றி தோழரே 07-Apr-2014 10:16 pm
நன்றி தோழியே 07-Apr-2014 10:15 pm
மிக அழகு......நட்பே.....! வாழ்த்துக்கள். 07-Apr-2014 9:16 pm
மிக்க நன்றி தோழரே 07-Apr-2014 9:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (83)

தமிழரசன் பாலா

தமிழரசன் பாலா

திருவண்ணாமலை
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
user photo

மோகன் ராஜ்

கோயம்புத்தூர்
சந்தோஷ்

சந்தோஷ்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (83)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்

இவரை பின்தொடர்பவர்கள் (83)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே