நட்பு

ஆம் அவனோடு சண்டையிடுவேன்....

சைக்கிள் மிதிப்பேன்...
நுங்கு வெட்ட செல்வேன்... பின் நுங்கு வண்டி ஓட்டி ரோட்டை அளப்பேன்

அவனோடு மட்டை பத்து அடிப்பேன்.. அவன் மட்டை ஆனா போது தோள் கொடுத்து நடப்பேன்...

சட்டை மாற்றி உடுபேன் -சில சமயம்
சாட்டை கொண்டு வெளுப்பேன்...

சில சமயம் பங்கு என்பேன்..
சில சமயம் மச்சி என்பேன்.. பல சமயம் சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள் தான் அவன் பெயராக இருக்கும்..

தம் அடிக்கும் போது வெளிய போடா நாயே என்பேன்..
தண்ணி அடிக்கும் போது சைடிஷ் பிடுங்கி தின்பேன்...

அவனோடு அதிகம் போட்டோ எடுப்பேன்..
Facebook playboy போஸ்ட் எல்லாம் அவனையே டேக் செய்வேன்...

பைக் ல போகும் பொது கம்பெனி கொடுப்பேன்... பைக் accident ஆனா பைக் கு ஒன்னும் ஆகலையே னு கேட்பேன்...

Share it இல் தாராளமாய் ஷேர் செய்வோம்.. பாக்ஸ் ல் உள்ள பிரியாணியை சண்டையிட்டு தான் .. பிடுங்கி தின்பேன்...

பரிசு பொருள்கள் அதிகம் பகிர்ந்ததில்லை
பகிரி பாசத்தை பல மடங்காக காட்டுவேன்..

அவன் பிறந்த நாள் கேக் வாங்க அவன்கிட்டயே காசு கேட்பேன்... ஏன்டா பொறந்தோம் னு நெனைக்குற அளவுக்கு முட்ட தக்காளி கொண்டு முகத்தில் அறைவேன்

வகுப்பில் பேசி மாட்டிகொள்வேன்
வாத்தி வசை பாடும் போது அவனை மாட்டி விடுவேன்...

பேருந்து பயணங்கள் .பெரிய பெரிய முடிவுகள்.. பகல் நிலா பாவைகள்.. பகைவனிடம் மோதல்கள்...
Vip திட்டுகள்... வெறுமையான தனிமைகள் .. என அனைத்திலும் உடன் இருப்பேன்..

காசு வேண்டும் .. கடமை உண்டு ... கவலை உண்டு .. கனவு உண்டு ... காலம் இல்லை .. அவனை கண்டுகொள்ள .. அவனோடு ஊர் சுற்ற ...

பேருந்து நிலையம் .. பார்பர் ஷாப் ... சூப் கடை .. விளையாட்டு திடல்.. என எதை நோக்கினாலும் .. நம்மை போன்ற சில நண்பர்கள் .. நாம் செய்ததையே செய்து கொண்டிருக்கின்றனர் .. .

இருக்கும் போதே கொண்டாடி தீர்த்திடுவோம் கவலைகளை பரிமாறி குறைத்திடுவோம்..

முதுமையில் தன் நண்பர்களை இழந்து தனிமைப்படுத்த பட்ட ஒரு கிழவனுகோ . கிழவிக்கோ தான் தெரியும் நண்பர்கள் அற்ற நட்பியல் தினம் எவ்வளவு கொடியது என்று.....

இனிய நட்பியல் தின வாழ்த்துக்கள்...

எழுதியவர் : பாலா (2-Oct-17, 7:00 pm)
Tanglish : natpu
பார்வை : 113

மேலே