மழை

ஓடி ஒளிய முடியாத ...
பக்க துணை யாருமற்ற...
ஒரு கடற்கரை மணலில் ...
கோடி முத்தங்களை ஒரு சேர பொழிந்து எனை ஆட்கொண்டது இம்மழை...

கையும் களவுமாய் சிக்குண்ட ஒரு கள்வன் போல..

கடைசி ஆயுதத்தை இழந்த ஒரு போர் வீரன் போல

தங்கையின் சமையலை உண்ட அண்ணன் போல ..

யாதொன்றும் செய்யா இயலாமல் முத்து (முத்த ) மழைதுளிகளுக்கு அடிமையாகி போனேன் ....

குளிப்பதற்கு கடலில் களிப்பதற்கும் இல்லாத ஒரு ஆனந்தம் நனைவதில் உள்ளது ..

மற்றவைகளில் நீரை நாம் தேடி போவோம்.
நனைவதில் மட்டும் நீர் நம்மை தேடி வரும்

திருமண அட்சதை போல ..
அன்பு தங்கை இன் கொட்டு போல ..
பிறந்த நாள் முட்டை போல..
தலை தொட்ட நண்பனின் பாராட்டை போல ..
உச்சி முகர்ந்த அம்மாவின் முத்தத்தை போல ..
காதலியின் விரல் கோதும் கேசத்தை போல .

அத்தனை அன்பாய் உரிமையாய் என் தலை தொட்டது அம்மழை

குளிக்க அழும் ஆனால் தண்ணீரில் கொண்டாட்டம் போடும் மழலை .

உன்னிடம் யார் கேட்டது ... நான் செய்வதை செய்வேன் எனும் திமிர் பிடித்தது இம்மழை...

நாம் கேட்கும் போதெல்லாம் முத்தம் தராத தான் விரும்பும் போது மட்டும் தரும் மழலை போன்றது மழை கொடுக்கும் போதே வாங்கிகொள்ளவேண்டும் .

மழைகாலம் முடியும் வரை இரு பாலி எத்தின் காகித்ததை என் பாக்கெட்டின் உள்ளே வைத்து கொள்ள போகிறேன் ..

காதலை பிரிக்கும் சாதி மதம் போல நம் இணைப்பை எப்போதும் பிரிப்பது இந்த சொல்லிட பேசி தான்..

அதை பாலித்தீனில் சிறை வைத்து எப்போதும் எங்கேயும் கலப்போம்...

மழையே முடிந்தவரை நான் ஓடி ஒளிய முயற்சிக்காத முன்னமே என்னை சிறை படுத்து ... 💝

எழுதியவர் : பாலா (2-Oct-17, 6:48 pm)
Tanglish : mazhai
பார்வை : 71

மேலே