நீல திமிங்கல அட்மின்கள்

எல்லோரும் நீல திமிங்கலம் விளையாட்டின் அடிமைகள் தான்...
உயிரை விடுங்கள் என்ற கட்டளை நம் அட்மின்களிடம் இருந்து இன்னும் வரவில்லை ... அதற்கு நிகரான அனைத்து டாஸ்க் களையும் நித்தம் நாம் முடித்து கொண்டிருக்கிறோம் ...

அந்த அட்மின் சில நேரம் அன்பை பரிசோதிக்கலாம் ..

சில நேரம் நம் சுய மரியாதையை ...
சில நேரம் நம் தன்னபிக்கையை ....
சில நேரம் நம் முட்டாள்தனத்தை ...
சில நேரம் நம் கொள்கைகளை...
பல நேரம் நம் செல்வ செழிப்பை...

எல்லா டாஸ்க் களையும் முடித்து அடுத்த நிலைக்கு தாவ எத்தனிக்கிறோம்

பள்ளி பருவங்களில் அட்மின்கள் ஆசிரியர் .. மற்றும் பெற்றோர்களின் வேடமணிந்து வருகின்றனர்...

கல்லூரிகளில் காதலிகளாக
வேலையற்ற நாட்களில் சொந்தபந்தங்கள் வேடமும்..
வேலை கிடைத்த பின்னர் மேனேஜர் முதலாளி வேடங்களிலும்
நமக்கு டாஸ்க் கொடுக்கிறார்கள் ..
திருமணம் முதுமை என எல்லா காலகட்டங்களில் நம்மை ஆட்டி வைக்கும் அட்மின்கள் உள்ளனர் ...

அவர்கள் உண்மையில் நம் மூளையை அடிமை படுத்த வில்லை ...
நாமாக அவர்களிடம் நம்மை ஆட்சி செய்யுமாறு பணிக்கிறோம்

நாம் நம் முளையை ஆட்சி செய்ய நினைக்கையில் ஏதோ ஒரு அட்மினால் நமது கடைசி டாஸ்க் ஆன தூக்கில் தொங்குவதோ .. மாடியில் இருந்து குதிப்பததோ அல்லது அதற்க்கு இணையான ஒரு டாஸ்க் ஐ முடித்து இருப்போம் ...

இப்போது அந்த விளையாட்டிற்கு நீல திமிங்கலம் என பெயரிட்டு இருக்கிறோம் ..
பல காலமாக அதற்கு வாழ்கை என்றொறு பெயருண்டு.

எழுதியவர் : (2-Oct-17, 6:55 pm)
பார்வை : 31

மேலே