பெண்களின் நட்பு

பட்டு பாவாடை கட்டி பட்டாம்பூச்சியாக சுற்றி திரிந்தோம்
எட்டு வயது வரை ஏழு உலகையும் சுற்றிய அளவிற்கு வளம் வந்தோம்
எண்களின் குட்டி ஊர்களின் சுற்றுபுறத்தை துளியும்
பயம் இல்லாத மனதில் குழப்பம் இல்லாத குட்டி வாழ்க்கை
சுற்றி திரிந்த வாழ்வில் எட்டி பார்த்தது இளமை
இணைந்து இனிதே திரிந்த இரு கரங்கள் பிரிந்தன
உலகை சுற்றிய இரு உள்ளம் நான்கு சுவற்றில் அடைந்திட
அவர்களின் இனிய உறவு இல்லறம் வாழ்க்கை என்ற
இருளில் மூழ்கி மூச்சிறைத்து மூழ்கி விட்டது
பாவம் முதலே தெரிந்திருந்தால் அந்த ஆதி அன்னையும்
ஆண்கள் காணாத தேசம் ஒன்றில் பெண்களை விதைத்து இருபார்