சித்திரம்

சித்திரங்கள் உண்மைகளை உறுத்தும்
சிறந்த நல்ல கலை
சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும்
மட்டுமல்ல
சித்திரங்கள் அதனை தீட்டும் ஓவியனால்
நம்மோடு அளவளாவுகின்றன ,
ரசிக்கும் திறன் நம்மிடம் இருந்தால்
நம் மனத்தைக் கவரும் தன்மையும்
சித்திரத்திற்கு உண்டு
தத்ரூபமாக வரையும் சித்திரங்கள்
உண்மை காவியங்கள்
சரித்திரங்கள் பல சொல்லித் தரும்
சத்தியங்கள் நிறைந்து நிற்கும்,
சித்திரங்களாலும் கதைகளையும்
கற்பனைகளையும், காவியங்களையும்
தீட்டிட முடியும் என்பது உண்மை
ஒரு ஓவியன் தன் மனதில் கொள்ளும் காட்சியை
அவன் ரசிக்கின்ற கோணத்தில் எல்லாம் தீட்டிட முடியும்
அது இறைவன் அவனுக்குக் கொடுத்திட்ட கொடை
கண்ணில் தெரிகின்ற காட்சிகளையும்
நம் கண்ணுக்குப் புலப் படாத காட்சிகளையும்
உயிருள்ள சித்திரங்களாக வரைந்தெடுக்க
ஓவியனால் மட்டுமே முடிகிறது
அவன் வரைகின்ற சித்திரம் நம் கண்களுக்கு
வெறும் படங்களாக தெரிந்தாலும்
ஒவ்வொன்றும் பேசும் உண்மைகள்
நம்மை எல்லாம் வியப்படைய வைக்கிறது
இவை தான் உயிருள்ள ஓவியம்
சித்திரங்கள் சிந்தனையில் சிறகடிக்கும்

எழுதியவர் : பாத்திமா மலர் (19-Aug-15, 9:34 pm)
Tanglish : sithiram pesum
பார்வை : 250

சிறந்த நகைச்சுவைகள்

மேலே