தெரியவில்லை ம்ம்ம்ம்
உள்ளுக்குள் ஒரு நெருடல்......
சரியா! தவறா!
தெரியவில்லை ம்ம்ம்ம்......
நகர்கிறது இந்த நொடி........
தனிமை தரும் வலியா!
இல்லை
தலைவிதி தந்த வலியா!
தெரியவில்லை ம்ம்ம்ம்......
நகர்கிறது இந்த வாழ்க்கை........
வலிக்கின்றது!!!!!!
வெளி சொல்ல முடியா வேதனை!
இது உண்மையா!
இல்லை என் எண்ண ஓட்டமா!!!!
தெரியவில்லை ம்ம்ம்ம்......
நகர்கிறது இந்த நேரம்........
பெண்ணாய் பிறந்ததால்
இவ்வேதனையா!!!
இல்லை
இந்த உலகம் வகுத்த விதியா
தெரியவில்லை ம்ம்ம்ம்......
நகர்கிறது என் பெண்மை........
-மூ.முத்துச்செல்வி