கொஞ்சம் பின்னோக்கி
நான் பசியில் கிடந்த போது
வேடிக்கைப் பார்த்துச் சென்றதும்,
சற்றே நிர்வானம் மறைத்துக்
கிடந்த போது
விலகிச் சென்றதும்,
துன்பத்தில் உழன்று கிடந்த போது
சிரித்துச் சென்றதும்,
தொடர் வழுக்கலில்
மனதால் ஊனமுற்றுக் கிடந்தபோது
ஏளனமாகக் கடந்து சென்றதும்,
உங்களில் யாரோ சிலர் தானே..?
வேறொன்றுமில்லை...
என்னைக் கொஞ்சம்
பின்னோக்கிப் புரட்டிப்பார்த்தேன்...!