எம் ஏக்கம் நிறைவேறுமா

தின்னச்சோறு இல்லாவிட்டலும்
படுக்கப்பாய் வேண்டுமென
அம்மம்மா அடிக்கடி புலம்பிக்கொண்டிருப்பாள்

இன்று உண்ண உணவுமில்லை
உடுக்க உடையுமில்லை
படுக்கப்பாயுமில்லை
மழைக்கொதுங்க வீடுமில்லை
இது நமது நாடென்று பெருமை கொள்ள
சொந்த நாடுமில்லை

பிழைப்புத் தேடி வந்த நாட்டின்
தேசியக்கொடியை ஏந்தி
பூரித்துககொள்கின்றோம்

எப்போது எமக்கென்ற நாட்டின்
தேசியக்கொடியை பேருவகையுடன்
உயர்த்திப்பிடித்து வலம் வருவதுயென
விரக்த்தியில் வாழ்கிறோம் ........

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (21-Aug-15, 2:29 am)
பார்வை : 304

மேலே