காதல் என்றால்

விழி விரிந்தால் காதல் !
விழி கவிந்தால் காதல் !
இதை பெண்கள்
செய்வதுதான் காதல் !
ஆணின் நிலை என்னவோ
காதலில் ?
விழியிலிருந்து காலின்
விரல் நுனிவரை ரசிப்பவன்
ரசித்ததை அன்பாய்
அள்ளித் தருபவன் காதலன் !
வழங்கியதை
விரியும் விழிகளில்
புரியும் புன்னகையில்
கவிதையாக்கித் தருபவள் காதலி !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Aug-15, 9:21 am)
Tanglish : kaadhal endraal
பார்வை : 427

மேலே