கோமாளி

கோமாளி

வேடங்கள் போட்டு
வேடிக்கைக் காட்டும்
விந்தைய மனிதனவன்

துன்பத்தை மறைத்து
இன்பத்தைக் காட்டும்
கண்ணாடியவன்

உணவுக்கும் உடம்பிற்கும்
இடம் தேடி அலையும்
நாடோடியவன்

நடிக்கவும் நகைக்கவும்
செய்யுகின்ற
நடிகனவன்

கலைத்துறையில்
காலங்கள் போற்றும்
கலைஞ்சனவன்


அவன் தான்
ஆயிரம் அர்த்தம் கொண்ட
" கோமாளி "



- கௌதம்

எழுதியவர் : கௌதம் (21-Aug-15, 10:10 am)
பார்வை : 430

மேலே