எழுத்திற்கு நன்றி
பள்ளி பருவத்தில் தளிர்ந்தது கவிதை
பெற்றேன் பல பரிசுகளும்
துளிர்ந்த அசைகள் மறைந்தன
கல்லூரி வாழ்கை துவங்கிட
நான் பயின்றதோ ஆங்கில வழி
அழிந்தன அறிந்த எழுத்துகள் அனைத்தும்
முடிந்தே விட்டது கல்லூரி வாழ்கையும்
கவிதை போட்டிகளில் துளிர் விட்டது
என் மனம் ஏனோ புரியவில்லை
புரிந்தது பின்னர் நானும்
பிறந்தேன் மீண்டும் தமிழனாக !!!
துவங்கி விட்டேன் நானும்
கண்ணில் பட்டதை கவிதைகளாய் மாற்ற
ஆனால் அதனை காண யாருமில்லை
நல்ல வேலை இமைகளில் பட்டன
இந்த எழுத்து இணைய தளம்
உருவாக்கிய அனைவருக்கும்
இதயம் கனிந்த நன்றிகள்!!!!!!!