இது யாருடைய குற்றம்
தலைப்புச் செய்தி
"வகுப்பில் ஆசிரியையிடம் ஆபாச வார்த்தைகளால் பேசிய மாணவன் பள்ளியிலிருந்து நீக்கம்."
என்ற செய்தி அன்றைய அணைத்து தினசரியிலும் தலைப்புச் செய்தியாக வந்து காட்டுத்தீபோல் தமிழகம் எங்கும் பரவி அணைத்து மாதர்சங்கங்கள் மற்றும் மகளிர் அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அன்றைய தினத்தில் அணைத்து நியூஸ் சேனல்களிலும் விவாத நிகழ்ச்சியில் இடம் பெற்ற தலைப்பும் இதுவே ஆகும்.
மறுநாள் அணைத்து மீடியாக்களும் பாதிப்புக்குள்ளான அந்த ஆசிரியையின் வீட்டிற்கு முன்பு வந்தனர். மீடியாவின் அனைத்து கேள்விகளுக்கும் கண்ணீரை மட்டுமே பதிலாக தந்தார் அந்த ஆசிரியை.
மூன்று நாட்களுக்குப் பிறகு ஆசிரியையின் செய்தியை மறந்துவிட்டு அடுத்த சூடான செய்தியை நோக்கிச் சென்றுவிட்டது மீடியா. ஆசிரியையும் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மறந்து இயல்பு நிலைக்குத் திரும்பி மீண்டும் பள்ளிக்குப் போகத் தொடங்கினாள். பள்ளியில் வேலைப்பார்க்கும் சக ஆசிரிய ஆசிரியர்கள் அந்த ஆசிரியைக்கு ஆறுதல் என்ற பெயரில் பழைய நினைவுகளைக் கிளறினர். இவையனைத்தையும் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது வகுப்பறை நோக்கி நடந்தாள்.
**********
வகுப்பறையில்:
இரண்டு மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அதில் ஒருவன், "என்னடா இன்றைக்கு இந்த மிஸ் இவளோ டீசண்டா டிரெஸ் பண்ணியிருக்காங்க?", என்று கேட்க அதற்கு மற்றொருவன், "அதானே இன்றைக்கு அவங்க இழுத்துப் போர்த்தி டிரெஸ் பண்ணியிருக்காங்களே ஆச்சரியமா இருக்கு". "ஒருவேளை சங்கர் அவங்க டிரெஸிங் சென்ஸைப் பற்றி அவங்க கிட்ட கமெண்ட் அடிச்சிருப்பான்னு நினைக்கிறேன்". "நம்ம சங்கர் ஒரு லூசு டா, மிஸ்ஸோட டிரெஸ் ஒரு மாதிரி இருந்தா அத கண்டும் காணம பார்த்தும் பார்க்காம இருக்குறத விட்டுட்டு அவங்ககிட்டயே கமெண்ட் அடிச்சா இப்படி தான் டீ.சீ. கொடுத்துடுவாங்க".
இரண்டு மாணவிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி, "இந்த சங்கர் அப்படி என்னதான் மேடம் கிட்ட சொல்லிருப்பான்". "தெரியல டீ ஏதோ ஏன்ட்ட சொன்ன மாதிரி கேக்கற?". "இந்த பிருந்தா மேடம் அவனுக்கு இவளோ இடம் கொடுத்ததால் தான அவன் இப்படி அட்வான்டேஜ் எடுத்து கேட்டிருக்கான்." இவர்கள் இப்படி பேசியது பிருந்தா மேடம் காதில் விழுந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் பாடத்தை நடத்தினாள்.
வகுப்பை முடித்துவிட்டு நேராக தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றாள் பிருந்தா மேடம். "குட் மார்னிங் சார்", பிருந்தா மேடம் தலைமையாசிரியரைப் பணிந்தாள். "குட் மார்னிங் பிருந்தா. ஆர் யூ ஆல்ரைட் நௌ?".
"எஸ் சார் ஐ ஏம் ஃபைன். ஒரு சின்ன ரிக்வெஸ்ட் சார்."
"சொல்லுங்க பிருந்தா."
"சங்கர மறுபடியும் ஸ்கூலில் சேர்த்துக்கோங்க சார்."
"நோ பிருந்தா. இது வேண்டாம் பெரிய ரிஸ்க்."
இல்லைங்க சார். அவன் 12th ஸ்டூடண்ட் இப்ப போய் அவனுக்கு டீ.சீ. கொடுத்ததால் அவன் ப்யூட்சரே பாழாகிடும்."
"அவனை ரீ ஜாயின் பண்ணசொல்லி வீட்டுக்கு லெட்டர் அனுப்பிடுறேன்."
"தேங்க்யூ சார்.", மனநிறைவோடு வீட்டிற்குப் போனாள் பிருந்தா மேடம்.
***********
லெட்டர் அனுப்பி ஒரு வாரமாகியும் சங்கர் பள்ளிக்கு வராததால் சந்தேகமடைந்த தலைமை ஆசிரியர் அவன் வீட்டிற்கேச் சென்று அவனைப் பார்த்தார். "வாங்க சார் உள்ள வாங்க.", சங்கர் அவரை வரவேற்றான். "என்னடா சங்கர் படித்தது போதும் இனி ஸ்கூலுக்கு போக வேண்டாம் னு முடிவு பண்ணிட்டயா?"
"இல்ல சார் அது வந்து...."
"என்ன அது வந்து இது வந்து னு இழுக்கற? நீ செஞ்ச காரியத்துக்கு உன் மூஞ்சியில முழிக்கக் கூடாது னு இருந்தேன். ஆனால் பிருந்தா மேடமே உன்னை மன்னித்து ஸ்கூலில் சேர்க்க சொன்னதாலத்தான் நான் லெட்டர் போட்டன், ஆனால் நீ அதையும் மதிக்காமல் ஸ்கூலுக்கு வராமல் இருந்தால் என்ன டா அர்த்தம்."
"அங்கு வந்தால் மறுபடியும் அவங்களை பார்க்க வேண்டியது இருக்கும்."
"உன் குற்றமுணர்ச்சி எனக்கு புரியுது டா, அதுக்காக ஸ்கூலுக்கே வராமல் இருந்தா எப்படி?"
"குற்றம் செஞ்சா தான் குற்றமுணர்ச்சி இருக்கும். தப்பு செய்தது பிருந்தா மேடம் தான் நானில்லை."
"என்ன டா சொல்லற?"
"ஆமா சார். பிருந்தா மேடம் இந்த வருடம் தான் நம்ம ஸ்கூல்ல சேர்ந்தாங்க. அவங்க க்ளாஸில் நான் கொஞ்சம் ஆக்டிவாக இருப்பதால் என் மீது அவங்களுக்கு தனி அக்கறை. அவங்க தம்பி சின்ன வயசுலயே இறந்துட்டாங்க, நான் இறந்துபோன அவங்க தம்பியின் முக்கிய ஜாடையோடு இருந்ததால் என்னை அவங்க தம்பி னு தான் கூப்பிடுவாங்க. நானும் அவங்களை என் உடன்பிறவா சகோதரியாகத்தான் பார்த்தேன். அதனால்தானோ என்னவோ நான் அவங்க கண்களை மட்டுமே பார்த்துப் பேசுவேன். ஆனால் என் கண்களைத் தவிர மற்ற மாணவர்களின் கண்கள் பிருந்தா மேடத்தின் கண்களைப் பார்க்காமல் மற்ற பாகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தன அதை நான் பார்த்தேன். ஆம் பிருந்தா மேடம் காலேஜ் முடிச்ச கையோடு வேலைக்குச் சேர்ந்ததால் அவர்கள் உடுத்தும் உடையில் கல்லூரிப் பெண்கள் அணியும் ஆடை நாகரீகம் இருந்தது. அவங்க சாரியை மிகவும் டைட்டாகவும் லோ ஹிப்பிளும் அணிந்து வரு வாங்க. மாணவர்கள் அவங்களை பார்க்கும் விதம் என்னை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியது. இதை நான் அவர்களிடம் கூறியதால் தான் இத்தனை பிரச்சனைகளும் வந்தன. கடைசியா தப்பு செஞ்சவங்களாம் நல்லவர்கள் தப்பை எடுத்து சொன்ன நான் கெட்டவனாகிட்டேன். நான் மறுபடியும் ஸ்கூலுக்கு வந்தால் என்னுடன் படிக்கும் மாணவிகள் என்னை பழைய நட்புடன் பார்ப்பார்களா? இல்லை நான் என் அன்னையைப் போல் நினைத்து கொண்டிருக்கும் ஆசிரியைகள் என்னை அவர்கள் மகனாக வேண்டாம் ஒரு மாணவனாகவாது பார்ப்பார்களா? சொல்லுங்க சார்."
பதில் பேச முடியாமல் கண்கலங்கிய படி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் தலைமை ஆசிரியர்.