காலைச் சாரல் 14 - என்ன சொல்ல

அதிகாலை எண்ணங்கள் "என்ன சொல்ல"

சென்ற காலைச் சாரல் எழுதி கிட்டத் தட்ட முப்பது நாட்கள் ஆகப் போகிறது... எழுத ஒரு உந்துதல் ஏற்படவில்லை... சுற்றி நிறைய நேகடிவிட்டி..

இரண்டு சிறு கதைகள் எழுதியபோதும் மனதில் ஒரு ஆறுதல் இல்லை... இரண்டும் கொஞ்சம் சோகக் கதைகளாகவே இருந்துவிட்டது... முதல் கதையின் ("கதையல்ல.."eluthu (dot ) com/kavithai/255541) காரணி சுய வாழ்வில் நடந்ததே என்றாலும் அந்த இரண்டாவது கதையின் கரு மனதை பாதித்த சமீபத்திய நிகழ்வு.. ("உயிர்" eluthu (dot ) com/kavithai/256674.)

பொது இடத்தில ஒரு பெண் நின்றுகொண்டு அழுகிறாள்.. சின்னப் பெண் .. காரணம் என்னவாக இருக்கும்... இந்தப பார்வையில் சிந்தித்த கதை எழுதும்பொழுது திசை மாறி விட்டது.... அனால் நிறைய சொல்லவேண்டிய விஷயங்கள் சொல்லிவிட்டேன் கதையில் ....

-- போது இடத்தில ஒரு பெண் நின்றுகொண்டு அழுகிறாள் ... காதில் கைப்பேசி...கைப்பேசித் தகவல் அவளை மேலும் மேலும் அழவைக்கிறது.. சின்ன வாக்குவாதமும் நடக்கிறது.. எதிர் முனையின்மேல் நமக்கு ஏனோ கோபம் ஏற்படுகிறது.... நம்மால் எந்த உதவியும் செய்ய முடிவதில்லை.

-- நடு வீதியில் பேருந்தை நிறுத்தி பயணச் சீட்டு சோதனை... பின்னால் வரும் வாகனங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.... முக்கால் வீதியை மறைத்துத்தான் சோதனை செய்ய வேண்டுமா..? பொறுக்காமல் போய் சொன்ன பிறகுதான் பல்லவன் சிறிது ஓரம் கட்டினார்.... மூன்று வரிசை வாகனம் செல்லும் பாதையில் இரண்டு வரிசையை அடைத்திருந்தனர்....

--- நவீன உபகரணங்கள் தேவையானபோது நம் உதவிக்கு வராது.. இருந்தும் பயனில்லை... நொண்டும்...

--- நமக்கு சம்பந்தம் இல்லாதவற்றைப் பற்றி வீண் கவலை... என்ன முயன்றாலும் நம்மால் எதையும் செய்ய இயலாத நிலையில் அமைதி கொள்ளாமல் வீணற்ற பதட்டம், பரபரப்பு...

--- நிற்கும் வாகனம்முன் வீதியை கடக்காதீர்கள்... சின்னக் குழந்தையாய் இருந்தபோது கற்றுத்தந்த பாடம்... பின்பற்றுபவர்கள் மிகக் குறைவு...

--- வண்டி ஓட்டும்போது அல்லாமல், நடக்கும் போதும் வீதியைக் கடக்கும் போதும் கைப்பேசியை தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லாமல் இருப்பது..

இத்தனை விஷயங்களையும்..இந்தக் கதையில் என்னை அறியாமல் திணித்திருக்கிறேன்...

இதைத் தவிர சென்ற சில நாட்களில் தெருவைத் தோண்டுவதைப் பற்றி கவலைப்படுதல்... எழுதிய கவிதைகளை அதிகம் பேர் படிக்காதைப் பற்றி கவலைப் படுத்தல்... எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவது எப்படி என்ற கூடுதல் கவலைப்படுதல்..

ஒரு ஆறுதல் - கவிதை நண்பர்கள் சிலர் முக நூலில் அறிமுகமாக தினம் நிறைய கவிதைகள் like / comment பரிமாறப் படுகிறது...

கடைசியாக --- எதாவது எழுதவேண்டுமே என்று எழுதினால் இப்படித்தான் இருக்கும்..

--- முரளி

எழுதியவர் : முரளி (21-Aug-15, 5:32 pm)
பார்வை : 85

மேலே