நட்பு தேவதைக்கு ஒரு வாழ்த்து
இன்று எந்தன் நட்பு தேவதை ....
மண்ணில் பிறந்த தினம் .... ஆம்
விண்ணின் நிலவின்று ....
என் நட்பு தேவதையாய் ......
இன்று மண்ணில் பிறந்த தினம் ....
அழகாய் இருப்பவர்கள் .....
அன்பாய் இருப்பதில்லை....
என்பதை பொய்யாய் மாற்ற ....
விண்ணின் நிலவின்று ....
என் நட்பின் தேவதையாய் ......
இன்று மண்ணில் பிறந்த தினம் ....
எத்தனையோ நட்பு உண்டு என்னில்
வெறும் இரயில் சிநேகங்களாய்.... ஆனால்
உன் நட்பு மட்டும் என்றென்றும்
என்னோடு உயிர் சிநேகமாய் .... ஆம்
தோழமையின் அர்த்தம் மட்டும் அல்ல ...
தோழமையின் ஆழமும் கூட
நான் உன்னில் மட்டுமே கண்டேன் ...
என் நட்பின் தேவதையே .....
உன்னை போன்றொரு நட்பு வேறில்லை ...
இன்னும் சொன்னால் நீ
நீ மண்ணில் பிறந்த அன்றே ...
நட்பு எனும் சொல்லும் பிறந்ததென்பேன் ....
ஆம் எந்தன் நட்பின் தேவதையே ....
நீ மண்ணில் பிறந்த அன்றே ...
நட்பு எனும் சொல்லும் பிறந்ததென்பேன் ....
விழிகள் காணாத தூரத்தில் .... நீ இன்று
என ஊரார் நினைப்பதுண்டு .... ஆனால்
ஒருநாளும் என் உள்ளம் நினைப்பதில்லை...
ஆம் என்றென்றும் என்னில் நீ இருப்பதனால்
ஒருநாளும் என் உள்ளம் நினைப்பதில்லை...
இன்று பிறந்தநாள் காணும் எந்தன் நட்பு தேவதையே ..
நீ பிறந்த இந்நாளில் உந்தன்
வண்ண வண்ண கனவுகள் எல்லாம் ...
உந்தன் சின்னக்கரம் வந்து சேர ...
வளமான வாழ்வு அது
உன்னில் நிரந்தரமாய் குடியேற ....
மகிழ்வு எனும் மலர்கள் என்றும்
உன் மனது சூடி நிற்க ....
நெற்றியிலே செந்தூரம் அது என்றென்றும்
உன்னோடு சேர்ந்திருக்க ...
உன்னை போல் ஒரு நிலவை ....
வெகு விரைவில் பெற்றெடுக்க ...
நலமோடு வளமும் பெற்று
வாழிய நீ பல்லாண்டு
என எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன் ....
வாழ்க வளமுடன் ....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....