Jasmine

உயிர் மொழியே!
எங்கிருக்கிறாய்?
இதயத்தை
விட்டு விட்டு
தேடினேன் (தேடுகிறேன்)
எங்கும்...

ஓசையில்
வைக்க முடியா !
இசை நீ...
பாட்டினில்
எழுத முடியா!
கவி நீ...
எண்ணத்தில்
சொல்ல முடியா!
அமுது நீ...

எப்பொழுது
என் தோழியாய்...
இதயத்திற்குள் வந்தாய்
தெரியாது!
எப்பொழுதும்
எந்தன் இதயத்தில்
நீ!...
அதை மாற்ற முடியாது!

எந்த தவறையும்
தெரிந்து செய்யவில்லை!
ஆனால் தவறையும்
தவறாமல் ஏற்றுக்கொண்டாய்
என்னுடன்...

நான்
உனக்கு
நிறைய
தொல்லைகள்
கொடுக்கிறேன்...
Sorry Jas.....

உன்னை விட்டு
போனாலும்
நாம் சென்ற
எல்லா இடங்களிலும்....
என் கற்பனையில் !
நாம் என்றும்
பயணித்துக் கொண்டு
தான் இருப்போம்!

எத்தனை தூரம்
போனாலும்...
எத்தனை உறவு
வந்தாலும்....
உனை என்
இதயத்தில்
நிறைத்தே...
வைத்திருப்பேன்
தோழியே...!

ஒரு நாள்
ஒரு பொழுது
ஒரு நொடி
உன் மடியில்
தவழ்ந்தாலே போதும்...
அதுவே என் கடைசி நொடியாக...
அமைந்தாலே போதும்...


உன் அருகில்
மகிழ்ச்சிக்கு
எல்லை இல்லை!

எனக்காக
பதறிடும்,
உன் பதற்றமும்,
எனக்காக
அழுதிடும்
உன் கண்களும்
எனை
நெகிழ வைக்கும்
ஆயுதங்கள்...

உனை பார்க்கின்ற
வேளை வருகின்ற
வாஞ்சையை
வார்த்தையில்
கூற தெரியவில்லை...
ஒரு வித
அழுத்தம்
உண்டாகிறது
இதயத்தில்...
எப்பொழுதும்
அன்பே
வெளிப்படுகிறது
அந்த தருணத்தில்...

உனை திட்டும் வேளை
மனது வலிக்குதடி...
திட்டிய மறு கணமே!
உனை கட்டி அணைக்க தோணுதடி...

எத்தனை பிறவி
எடுத்தாலும்
அத்தனையிலும்
நீ எனக்கு
வேண்டுமடி தோழியாக...
இல்லையேல்
இருவருக்கும்
பிறப்பு என்பது
வேண்டாமடி...
விண்ணிலும்
நம் நட்பை
வாழ்ந்து காட்டுவோமடி!...

ஆழ்கடலில்
மூழ்கி எடுத்த
முத்தல்லோ நீ!
நெஞ்சம் எனும்
கிண்ணத்தில்
ஏந்திக் கொண்ட
சிப்பியன்றோ நான்!

எனை கொலை செய்ய
வருபவர்களிடம்!ஓர்
கருணை மனுவை வைப்பேன்!
எனை எங்கேயேனும்
குத்தி சாயுங்கள்!
ஆனால் இதய இடத்தில்
இடித்து விடாதீர்!
அங்கே என் தோழி
வீற்றுக்கொண்டிருக்கிறாள்... என்று..

நவீனம் கற்கும்
கவின் நீ!

மல்லிகை வாசம்!
மனதை வாட்டும்(மயக்கும்...)
உன் பாசம்!
எனை தாலாட்டும்...

எடுத்தலும்
விடுதலுமான
மூச்சை...
எடுக்கிறேன்...
விடவே இல்லை!
மூச்சு (மூச்சுக் காற்று)
நீ என்பதால்!

எனை
சரிக்க
எவர் வரினும் !
எனை
எரிக்க (எரிக்கும் காலம் தாண்டியும்...)
வேண்டும்
நீ எனக்கு!

தலையணை
சண்டை போதும்
நமக்குள்!.. (நட்புக்குள்)

என் தலை
அணைத்துக் கொள்ளும்
உன் தோளை!
என் ஏற்றஇறக்க(எல்லா நொடிதனிலும்)
நொடிதனில்...

உன் வலி(வேதனை)
பரிணமிக்கட்டும்
உன் கண்ணீரின்
வழியே என் இதயத்திற்கு...

எதற்காகவும்
நீ கலங்க கூடாது
Jas...
என்னால்
அதை தாங்கிக் கொள்ள முடியாது.
அதனால்
உனக்கு எந்த பிரச்சனை
என்றாலும்
அதை உடனே
என்னிடம்
சொல்லி விடு...

நெஞ்சில் எனை வாங்கிக் கொண்டும்,
தோளில் எனை சுமந்து கொண்டும்,
மடியில் எனை ஏந்திக் கொண்டும்,
மொத்தத்தில் என் தொல்லைகளை எல்லாம்
தாங்கிக் கொண்டு
என்றும் என்னுடன்
இருப்பவள் நீ தானடி...!

சாரல் மழையில்
மின்சாரம் பாய்ந்தது
மின்னலில்...
நாட்கள் பாதையில் (பாதையின் முடிவில்)
கண்ணீர் பெருகியது
கண்களில்...

உன் ஸ்பரிசம்...
தாயின் ஸ்பரிசம்...
வித்தியாசம் உண்டோ?!

பேருந்தின்
கம்பிகளுக்கும்
சிலிர்ப்பு உண்டாகி இருக்கும்
நம் நட்பை பார்க்கும் தனில்...(பார்க்கும் வேளைதனில்,பார்க்கையில்)

முப்பொழுதும்
உன் கற்பனைகள்
அதில்
யார்? அவள் யாரோ?
நீ தானடி!

உன் கை பிடித்து
பல தூரம் நடந்தாலும்...(சுவாரஸ்யத்திற்கு சற்றும் குறைவிருக்காத பயணம்)
அது நீளாதோ!
அது நடவாதோ!
மீண்டும் என்று மனம் ஏங்குகிறது...

நெஞ்சம் சிந்தும்
கண்ணீரை ...
தஞ்சம் புகுந்து(நெஞ்சில் நுழைந்து)
துடைத்தவளே...
இனி
கண்ணீர் சிந்திட கண்கள் இருக்கும்...
துடைத்திட கைகள் இருக்கும்...
இருவருக்கும் இடையில் இடைவெளியும் இருக்கும்...
உடல்களுக்கு மட்டுமே
தூரம்
நீளமானதாகவும்...
அகலமானதாகவும்...
உயரமானதாகவும்...
இருக்குமே தவிர
உள்ளத்திற்கு அல்லவே!(இல்லையே!)

கைபேசி வாயிலாகவும்...
மின்னஞ்சல் வாயிலாகவும்...
முக நூல் வாயிலாகவும்...
இணைந்தே இருப்போம்...
இறுதி வரை
உறுதியுடன்

என்னிடம்...
எவரேனும்!
உன் தோழி
மீது ...
எவ்வளவு
பாசம் வைத்துள்ளாய்...
என்று கேட்டால்!
கைகளை குறுக்கத்தில்(Row)
நீட்ட முடியவில்லை!
ஏனெனில்!
வானத்தை கட்டியணைக்கும்
வல்லமை என்னிடத்தில் இல்லையே!

நான் கங்காருவாய்
பிறப்பெடுக்க வேண்டும்...
அதில் உன்னை என்
பிள்ளையாக பெற்றெடுக்க வேண்டும்...
என்றென்றும் நான் உன்னை
சுமக்க வேண்டும்....

வெற்றி உனதானது...
உன் தீவிர வேட்கையில்(பற்றுதனில்...)

காரண காரியத்தோடு
செய்வதல்ல செயல்கள்
நட்பினில்...
அது தான் நம் நட்பு...

வானம் பெயர்ந்து வீழ்ந்திடினும்!(Sky)
பிரபஞ்சம் அணு அணுவாய் வெடித்திடினும்!
பூமி பிளந்து போய்விடினும்!(Land)
காற்று கார்பன்டை ஆக்சைடை மட்டும் கக்கிடினும்!(Wind)
கடல் யாவையும் அடித்துச் சென்றிடினும்!(Water)
நெருப்பு வெறுப்பை மட்டும் உமிழினும்!(Fire)
இந்த நட்பு மட்டும்
என்றும் நிலையானது...
மேன்மையானது...

மதியினால் விதி செய்திடு...
அன்பினால் உலகை வாங்கிடு...
அறிவினால் ஆற்றலை(செல்வத்தை) பெருக்கிடு...
என்னுயிர் தோழியே!...

யார் எது சொன்னாலும்
என் மனம் செவிசாய்ப்பதில்லை...
ஆனால் உன் பேச்சுக்கு
எதிர் பேச்சே!
கிடையாது என் மனதில்...

எப்பொழுதும் எந்த நொடிதனிலும் எந்த தருணத்திலும்
உன்னையே நினைத்து உனக்காக நான் இருக்கிறேன்...

எனை பற்றி
அக்கறை கொள்ள
நீ இருக்கையில் !
எதற்காகவும்
கலங்க வேண்டியதில்லை..
என் மனம்...

உனை யாரிடமும்
விட்டுக் கொடுக்க
மாட்டேன்...

ஒற்றை வார்த்தை
தோழி!
அதற்கு இணையாக
தந்திட எதுவும் இல்லை
என்னிடம்...
என் உயிரைத் தவிர!(எப்படியும் ஈடாகாது,ஆனால் உன் அன்பிற்கு தோதாக...என்னிடம் இதைத் தவிர! வேறு ஒன்றுக்கும் தகுதி இல்லை...)

அணைத்திடும்
வேளை
அணைந்திட
வேண்டும்
என் உயிர் .
பின் சரிந்திட
வேண்டும்
உன் மடியில்...

எனை எங்கேயும்
நீ தேட வேண்டாம்...
உனக்குள் தான்
நான் இருக்கிறேன்...

நிலை தடுமாறும்
வேளையும்!நிதர்சனம்
நீ எனை தாங்குவது...

எதை செய்கிறோமோ!
அதை சொல்லாமல்
செய்வது தான் ...
சுவாரஸ்யம்...
செய்கைகள் யாவையும்
செய்து விட்டு
சாதாரணமாய் நிற்பாய்...
என் பக்கத்தில்....

குளிரில் கதகதப்பு நீ!
வெயிலில் நிழல் நீ!
என் தேவைகளை
சரியாக புரிந்தவள் நீ!

முகத்தை வைத்தே!
கூறிடுவேன்...
நீ சிரிக்கிறாயா!
இல்லை சிரிப்பது போல்
நடிக்கிறாயா! என்று...

உனை தாங்கி பிடிக்கவும்...
கட்டி அணைக்கவும்
கைகள் மறப்பதில்லை....

மறைக்க விரும்பவில்லை
எதையும்.
மன்னிப்பு கேட்கிறேன்
மறுபடியும்...

வார்த்தைக்குள்
உன்னை வைக்க முடியாது...
ஏனெனில் நீ
என் வாழ்க்கை...

உன் மௌனம்
என்ன? ஆயுதமா!
எனை இரணமாக்கி
செல்கிறதே!...
அந்த மௌனத்திலும்
சொல்லி முடிக்க இயலா...
பாசம் ஒளிந்தே உள்ளது...

எழுத வேண்டியது
இன்னும் உள்ளது ..
எனக்குத் தான்
எழுத தெரியவில்லை
என் தோழியே!

உன் கோபம்,அடி
வலிக்கவில்லை...
உன் பிரிவு
வலிக்கத் தான்
செய்கிறது...

உன் மனதின்
எண்ணங்கள்
நிறைவேறட்டும்
திண்ணமாக...

குழந்தையின்
பசியை
தாய் கேட்டு
அறிவதில்லை
உணர்கிறாள்...
எனை கேட்காமலேயே!
எனை அறிவதினால்
நீயும் என் தாய் தானா!

உயிரிலும்,சிந்தையிலும் கலந்திட்ட உன்னை சலனம் இல்லாமல்
எப்பொழுதும் நெஞ்சில் நினைத்திட உனக்காக நான் இருக்கிறேன்
தோழியே!(Jas.....)

-உன் தோழி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-Aug-15, 5:20 am)
பார்வை : 168

மேலே