ஆலம் விழுதுகளே

2011 ல் புதுக் கவிதை

நம் நண்பர்கள்
வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில்
மலர்ந்த மலர்களே !

நம்பிக்கை என்னும் விதையை ஊன்றி,
இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுத்து
துணையிருக்கும் தூண்களே !

கண்ணீராலும், சிரிப்பாலும் நீரூற்றி,
நட்பை வளர்த்து உண்மையும் நேசமுமாய்
வேரூன்றியவர்களே !

பள்ளிப் பருவம் முதலாய்
எனைப் புரிந்து என் வளர்சசி கண்டு
என்னை ஆல விருட்சமாய் செய்த
ஆலம் விழுதுகளே.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Aug-15, 3:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 115

மேலே