தோள் மீது சாய சுகமாய் அழ

எனக்கும் தெரியும்,
என்னை தெரியும்!
சராசரி மனிதன் என் போல்
இங்கு சாமான்யர்கள் ஏராளம் !

விடியலை நோக்கி எங்கள்
வெறிக்கும் விழிகள்,
காத்திருக்கும் காந்தலில்
கால் கடுக்கும் வேளைகள்,

சும்மா நிற்பதும்
சுருக்கி பார்க்கவும்
தாங்காத வேளையில்
தகிக்கும் நாங்கள்

சுற்று முற்றும் பார்க்கிறோம்
தொடும் திசையிலும் இல்லை
தொலை தூரத்திலும் இல்லை

பரிவுடன் எங்களை பார்த்து
இனங்காட்ட தட்டிக்கொடுக்க
எவரும் இல்லையே

பலம் கண்டு பொறாமை கொள்ளாதவர்
பலவீனம் கண்டு பரிகாசம் செய்யாதவர்
இல்லையே
இங்கு எவரும் இல்லையே !

இடரும் எங்களை எழுப்பி நிறுத்த இன்று
எவரும் இல்லையே !.

எழுதியவர் : செல்வமணி (23-Aug-15, 12:36 am)
பார்வை : 227

மேலே