பா ஒரு ஃ பேஷன் ஷோ

மெல்லவே வீசிடும்
மேற்குவான் இன்காற்று
சொல்லிலே தேன்சிந்தும்
செந்தமிழ் நற்பாட்டு
விண்ணில் உலவும்
நிலவுடன் உன்உறவு
கண்ணிலோ
காதல் சிறகு !
---புதுப் பா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மெல்லவே வீசிடும் மேற்குவான் இன்காற்று
சொல்லிலே தேன்சிந்தும் செந்தமிழ் நற்பாட்டு
விண்ணில் உலவும் நிலவுடன் உன்உறவு
கண்ணிலோ காதல் சிறகு!
----இன்னிசை வெண்பா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மெல்லவே வீசிடும் மேற்குவான் இன்காற்று
சொல்லிலே தேன்சிந்தும் செந்தமிழ் நற்பாட்டு
விண்ணில் உலவும் நிலவுடன் உன்உறவு
கண்ணிலோ காதல் சிறகு விரியுதே
---ஈற்றில் ஒரே ஒரு சீரை அமைத்திருக்கிறேன். இது நிலை மண்டில ஆசிரியப்பா .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மெல்லவே வீசிடும் மேற்குவான் இன்காற்று
சொல்லிலே தேன்சிந்தும் பாட்டு ----1
விண்ணில் உலவும் நிலவுடன் உன்உறவு
கண்ணிலோ காதல் சிறகு -----2
---இவைகள் குறட் பாக்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு பா எத்தனை வடிவைப்புகள் சாத்திய மாகிறது.
ஃ பேஷன் ஷோவில் ஒரே அழகி வித விதமான ஆடையில் வந்து அழகு காட்டவது போல் இப்பா எனும் அழகி வித விதமான வடிவமைப்பில் அழகு பெறுகிறாள். பாவிற்கு அடிபடை அழகு . அந்த அழகு சொல் ஓசை கற்பனை ..இந்த அடிப்படை கொண்டு புனையும் போது அழகிக்கு ஆடை போலும் பாவிற்கு வடிவமைப்பு புதுப் புது அழகிய தோற்றத்தை தருகிறது.
----கவின் சாரலன்