லாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட் பெஞ்ச்
1. முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து நீங்க நோட்ஸ் எடுப்பதற்காகவே பாடத்தை கவனிச்சிங்க, நாங்க நல்லா தூக்கம் வருமேன்னு பாடத்த கவனிச்சோம்.
2. அப்சர்வேஷன் நோட்டையும், ரெக்கார்ட் நோட்டையும், அசைன்மென்டையும், எழுதின உடனே முன்னாடி கொண்டு போய் வாத்தியார்ட்ட நீட்டுவிங்க. நாங்க நண்பன் காப்பி அடிச்சிட்டு கொடுக்கற வரை காத்திருப்போம்.
3. பரீட்சைக்கு என்ன கேள்வி வரும்ன்னு நீங்க யோசிச்சிட்டு இருக்கப்ப, பரிட்சையே வராமா இருக்க என்ன செய்யலாம்ன்னு நாங்க யோசிச்சிட்டு இருந்தோம்.
4. ஜூனியர் பசங்களுக்கு நீங்க நோட்ஸ் கொடுத்து உதவி செஞ்சிங்க. நாங்க எந்த வாத்தியார எப்படி சாமாளிக்கனும்னு டிப்ஸ் கொடுத்து உதவி செஞ்சோம்.
5. லைப்ரேரில நெறைய புக்ஸ் எடுத்து நீங்க சாதனை செஞ்சிங்க. நாங்க நாலு வருசமா லைப்ரேரி பக்கமே போகலன்ற சாதனையை செஞ்சோம்.
6. கேண்டின் ல சாப்பாட்டுக்கு லேட் ஆனா, ஐயையோ லேப் ஸ்டார்ட் ஆக போவுதுன்னு சாப்புடாம ஓடுவிங்க. எங்களுக்கு எப்பவுமே சோறு தான் பர்ஸ்ட், லேப்லாம் நெக்ஸ்ட்.
7. நீங்க பாடம் புரியலைன்னா கேள்வி கேப்பிங்க; நாங்க எங்களுக்கு போர் அடிச்சா கேள்வி கேட்டு நேரத்தை ஓட்டுவோம்.
8. நீங்க காலேஜ் டே, ஹாஸ்டல்டே லாம் டைம் வேஸ்ட் ன்னு சொன்னிங்க. நாங்க அதுக்காகவே வருசம்பூரா வெயிட் பண்ணோம்.
9. பர்ஸ்ட் மார்க் வேணும் ன்னு பரிட்சை டைம் டேபிள் வந்த உடனே படிக்க ஆரம்பிசிருவிங்க. நாங்க பாஸ் ஆனா போதும்ன்னு பரீட்சைக்கு முதநாள் தான் புக்கையே எடுப்போம்.
10. வாத்தியார் பனிஸ்மென்ட் கொடுத்து வெளிய அனுப்பிட்டா, அவமானமா நினைச்சி மூஞ்ச தொங்க போட்டுபிங்க. நாங்க வாத்தியாரே ரெஸ்ட் எடுக்க சொன்னதா நினைச்சி ஆனந்தப் படுவோம்.
11. எக்ஸாம் க்கு முக்கியமா சிலபஸ் தெரிஞ்சி இருக்கணும்னு நீங்க நினைச்சிங்க. சீட்டிங் அரெஞ்ச்மென்ட் தெரிஞ்சா போதும்ன்னு நாங்க நினைச்சோம்
# மொத்தத்துல நீங்க வாழ்க்கைய தேடிட்டு இருந்தப்பவே, நாங்க வாழ ஆரம்பிச்சிட்டோம்.