முதல் கடிதம்
திருமணம் நிச்சயம் செய்த பின்
பொண்ணுக்கு மாப்பிள்ளை எழுதும் முதல் மடல்
அது அன்பு ஆசை அக்கறை உண்மை
இதெல்லாம் தன் வருங்கால மனைவி
அறிந்திருக்க வேண்டும்,
தன்னில் முழு நம்பிக்கை வரவேண்டும்
அப்போதுதான் இருவரும் ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ள முடியும்
என்ற ஒரே எண்ணத்தில்
தன் முழு விபரத்தையும்
கடிதம் மூலம் ஆண் தெரிவிக்கின்றான்
,
அதெல்லாம் அவள் அறியாது இருக்கும் போது
உண்மை அன்பு மலர்ந்திட வழியே இல்லை
என்று உணரும் பண்புள்ள ஆண் மகன்
எழுதும் முதல் கடிதம் வாழ்வில் மறக்க முடியாத
முதல் அன்புப் பரிமாற்றம் இம் முதல் கடிதமே
திருமணத்தின் பின்பு உண்மையுள்ள தம்பதியராய்
ஆயுள் எல்லாம் வாழ முடியும் என்பதற்கு
இந்த முதல் கடிதமே சான்று பகரும்
அந்த மடல்தான் வெறும் கடிதம் மட்டுமல்ல
அவர்கள் வாழ்வையே தீர்மானிக்கும் அன்பு உள்ள உண்மை வழி
அவள் பொத்திப் பாதுகாத்து வைத்திருக்கும்
தன் கணவனின் முதல் அன்புப் பொக்கிஷம்
விரும்பும் போதெல்லாம் எடுத்துப் படிக்கத் தோன்றும்
உள்ளத்தின் ஊற்றாகி வரும் உண்மை அன்பு மடல்
அது தான் உண்மை உள்ள காதல்
இந்த அன்பு வளர தொடரும் பாலமே இந்த முதல் கடிதம்
அதில் உள்ள அன்பு வார்த்தைகள் அன்பினால் அவளை
அணைத்து வைத்திருக்கும் ஆசையில் ஓர் கடிதம்
அவள் நினைவில் என்றும் அழியா வரம் காணும்
சுகம் கொண்ட முதல் கடிதம்