கானம் பாடும் காக்கை

கருமை நிறக் காக்கையே வா வா.....

வெள்ளை மனக் காக்கையே வா வா...

வெள்ளி வான வீதியில்

கருமை ஓவியம் வரைவாய் வா வா....


வேண்டாம் என்று வெளியில் வீசியதை

பகிர்ந்து கொடுக்க வா வா...

உயிரோடு இருக்கும்போது உணவு தரவில்லையே

பித்ருக்கள் என்றுதான் உணவு தர அழைக்கிறார்

விவாதம் செய்யாமல் விரைந்து உண்ண வா வா


கருமி வீட்டு வாசலில் கரைந்து

அவனை பயமுறுத்த வா வா

வாசல் தேடி வந்த ஏழைக்கு

உணவில்லை என்றுதான் உனக்களிப்பான் வா வா...

சனீஸ்வரனை வணங்கிட காக்கையாரே வா வா

அவனில்லாமல் உனக்கு உணவு யாரிடுவார் வா வா


தென்றல் வீசும் தென்னையில் கூடுகட்ட வா வா

தென்னை முட்டை அருகினில்

உந்தன் முட்டை இட்டு வா

வெடித்த முட்டை யாவிலும்

வெளிய வந்த குஞ்சுகள்

காக்கை வடிவில் கண்ணனாம்

கானம் பாடும் காக்கை தான்

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (24-Aug-15, 2:26 pm)
பார்வை : 61

மேலே