இனியவை செய்

அன்பினை விதைப்போம்
அறிவினை வளர்ப்போம்
நூல் பல பயில்வோம்
புதியன படைப்போம்
நல்வழி நடப்போம்
உழவினை பெருக்கி
பசியினை ஆற்றுவோம்..
பிணியினை அகற்ற
மருந்தினை காண்போம்
காட்டினை காப்போம்
நாட்டினம் வாழ...
வான்மழை பெருக..
தந்தை தாய் காப்போம்
தாய்மொழி பயின்று
தலைநிமிர்ந்து நடப்போம்.
ஆனந்த மலர்களாக...
வாசம் வீசி.....