மனதால் நேசிக்காத நட்பு

மனதால் நேசிக்காத நட்பு ....
நேசிப்பதுபோல் நடிக்கும் நட்பு ....
காரியத்துக்காய் பழகும் நட்பு ....
ஆருயிர் போல் பழகினாலும் ....
அது கூடா நட்பே ....!!!

உள் ஒன்று வைத்து ....
புறமொன்று பழகும் நட்பை ....
வளர்ப்பதை விட ஆரம்பத்தில் ...
வெட்டி எரிவதே சிறப்பு ....!!!

+
குறள் 821
+
கூடாநட்பு
+
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 41

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Aug-15, 6:55 pm)
பார்வை : 116

மேலே