தப்புத் தாளங்கள்

‪#‎தப்புத்_தாளங்கள்‬

சற்றுமுன் தான் இந்த நூலை படித்து முடித்தேன். பல குழப்பங்களுக்கு தெளிவான நம்பகமான பதில் கிடைத்த மகிழ்ச்சி.

நாம் அன்றாட மனித வாழ்வில் பல பழமொழிகளை பேசவோ கேட்கவோ செய்கின்றோம். ஆனால் அவற்றின் அர்த்தம் எல்லாம் உண்மைதானா என்று கேட்டல் உறுதியாக உண்மையென ஒப்புக்கொள்ள இயலாது. காரணம் இவையெல்லாம் காலம் காலமாக பிறர் கூற நாம் கேட்டு பின்பற்றி, நாம் கூற பிறர் கேட்டு பின்பற்ற என காலம்தோறும் நீண்டு கொண்டே செல்கிறது.

உதாரணமாக,

அமுக்கு பேய்
பொறை ஏறுதல்
ஒரு அப்பனுக்கு பிறந்தவனா
குங்குமம் இடுதல்
காக்கா பிடித்தல்
பெண் ஓர் விளைநிலம்
பெண் வலிமையற்றவள்
பெண் மலடி
என நீண்டுகொண்டே செல்கிறது பட்டியல்.

இது போன்று பலவற்றை இந்நூலில் காணலாம். ஆனால் அவற்றுக்கெல்லாம் இன்று நாம் கூறும் விளக்கங்கள் சரிதானா ? நாம் அறிந்து வைத்திருக்கும் பொருள் உண்மைதானா என்ற கேள்வியை உங்களுக்கே நீங்களே கேட்டுப்பாருங்கள். நம்பிக்கையான ஓர் பதிலை உங்களாலேயே தர இயலாது.
காரணம் ?

காலம் காலமாக நாம் வாழ்வழி செய்தியாகவே பலவற்றை அறிந்து வருகிறோம். அவ்வாறு வரும் செய்தியில் பொருள் திரிபு இருக்கும் என்பதை நாம் உணருவது இல்லை. மேலும் அந்த விளக்கங்களில் ஒளிந்திருக்கும் பொய்மை அறியாமை, மூடநம்பிக்கை, ஆணாதிக்கம் போன்றவரை நாம் அறிய முற்படுவதில்லை.

ஒருவேளை அவைகள் குறித்து கேள்விப்படும்பொழுது நமக்கு சந்தேகங்கள் வந்தாலும், சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நாம் முற்பட்டது இல்லை. அதற்கு காரணம் ஈடுபாடு இல்லாமையாக இருக்கலாம், அல்லது முன்னோர்கள் கூறியது எப்படி பொய்யாக இருக்க முடியும் என்ற குருட்டு நம்பிக்கையாக இருக்கலாம், அல்லது அறிய வழிகாட்டியோ ஆட்களோ இல்லாமல் போயிருக்கலாம்.

இனி அந்த குழப்பமோ கவலையோ வேண்டாம். நாம் சொல்வதும் செய்வதும் சரிதானா ? உண்மையான விளக்கம் இதுதானா? வேறேதாவது இருக்குமா ? என அறிய ஆர்வம் இருந்தால் போதும்,
"தப்புத் தாளங்கள்" என்ற இந்த நூல் உங்களை எந்தவொரு ஐயத்திற்கும் இடமின்றி தெளியச் செய்கிறது.
காலம் காலமாக நாம் சரியென நம்பி சொல்லிக்கொண்டும் செய்துகொண்டும் இருக்கும் தவறுகளை , அறியாமையை இந்நூலின் ஆசிரியர் மஞ்சை.வசந்தன் அவர்களை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். அதோடு உண்மைகளை அறிவியல் ரீதியிலும், அறிவு ரீதியிலும் விளக்கங்களை தந்துள்ளார்.

ஆகையால் நண்பர்கள் அனைவரும் இந்நூலை கட்டாயம் வங்கி படிக்கவும். ஐயம் தெளிந்து அறிவு பெறவும்.

நூலின் பெயர் : தப்புத் தாளங்கள்
எழுதியவர் ; தோழர். மஞ்சை வசந்தன்
பதிப்பகம் : விஜயா பதிப்பகம்

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 3:06 pm)
பார்வை : 116

சிறந்த கட்டுரைகள்

மேலே