நான் போவதெங்கே

நான் போவதெங்கே

உன்
மணிக்கழுத்தில்
முத்தமிட

மணியாகிப்
போவேன் !

உன்
சிறு விழிக்குச்
சிறகடிக்க

இமையாகிப்
போவேன் !

உன்
நாசிக்குள்
நடைபயணம்

நான் கொள்ளக்
காற்றாவேன் !

உன்
பேச்சுக்குள்
தேன் சுவைக்க

உன்
இதழ்வரியுள்
ஒளிந்திருப்பேன் !

உன்
பார்வையைப்
படம் பிடிக்க

என்
இதயத்தைத்
துடைத்து வைப்பேன் !

என்
உயிர் கலக்கும்
இடம் தேடி

நான்
உனக்குள்ளே
கரைகின்றேன் !

என்
காதலைக்
கண்டெடுக்க

நான்
காணாமல்
போகின்றேன் !

***

எழுதியவர் : நவீன் இளையா (27-Aug-15, 12:53 am)
Tanglish : naan povathenke
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே