மாங்கல்ய பாக்கியம் அருளும் வரலட்சுமி விரதம்

செல்வத்தையும் மாங்கல்ய பாக்கியத்தையும் வாரி வழங்கும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. லட்சுமி தேவியை குறித்து அனுஷ்டிக்கும் மிக சிறப்பான விரதம் ‘வரலட்சுமி விரதம்'. செல்வம், தானியம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்களை லட்சுமி தேவி அள்ளிக் கொடுப்பதால், இதை வரம் தரும் விரதம் எனவும் அழைக்கின்றனர்.

ஆடி அல்லது ஆவணி (வடஇந்திய ஸ்சிரவண மாதம்) மாதங்களில் திருவோணம் நட்சத்திர பவர்ணமி தினத்திற்கு முன் வரகூடிய வெள்ளி கிழமையன்று இந்த வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. செல்வ வளம் சிறக்கவும் ஜோதிடரீதியாக மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் மாங்கல்ய தோஷம் குறைந்து கணவருக்கு ஆயுள் பலத்தையும் நோன்பு நோற்ற பெண்கள் தீர்க்கசுமங்கலி யோகத்தையும் பெறுகிறார்கள்.

மனைவியை வெறுத்து விட்டு கண்ட பெண்களிடமும் மயங்கி இருக்கும் கணவன்மார்களை தன் வசம் கொண்டு வருவதற்கு இது மிகச் சிறந்த விரதம் ஆகும். எட்டுவகையான அஷ்ட ஐஸ்வரியங்களை செல்வங்களை வாரி வழங்குபவள் திருமகள். இவள் மஞ்சள்பட்டு உடுத்தி மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவள்.

அஷ்டலட்சுமிகள் மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாக வழிபடுவர். இவ்வாறு அஷ்டலட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம்.

வரலட்சுமி விரதம் ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக்கயிறை பூஜையில் வைத்து பிறகு கங்கணமாக கட்டிகொள்கின்றனர். வரலக்ஷ்மி விரதமன்று வீடுகளில் கும்பத்தில் தேங்காய் வைத்து அதில் மஞ்சளில் லட்சுமி முகம் உருவாக்கி, நகைகள், பூமாலைகள் அணிவித்து அலங்காரம் செய்து, அம்மனுக்கு பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு போன்ற பல பொருட்களை நிவேதனமாக படைப்பார்கள்.

மாங்கல்ய பாக்கியம் பின்னர் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம், மஞ்சள்கயிறு, பிரசாதம் வழங்குவார்கள். இப்படி இது போன்ற விரதத்தை மேற்கொள்வதாலும் இதில் கலந்து கொள்வதாலும், வாழ்க்கை புதுபொலிவுடன் ஏற்றம் பெற்று என்றும் நிலையான செல்வத்துடன் அன்பு செலுத்தும் கணவனையும் அடையப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.

அமைதியும் மகிழ்ச்சியும் பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வார்கள். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவவும், செல்வங்கள் பெருகவும், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் நலமுடன் வாழவும், சுமங்கலி பெண்கள் வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கலாம்.


(நன்றி: ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்)

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (28-Aug-15, 12:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 217

சிறந்த கட்டுரைகள்

மேலே