மஹா மந்திரங்கள்
"ஓம்" பிரணவ மந்திரம்
இந்த மஹா மந்திரத்திற்கு எகாஷரம், ஜீவா மந்திரம் என்ற பெயர்கள் உண்டு. இது பிரம்மா சுரூபத்தின் ஆதிசங்கல்பம். இதற்கு அதி தேவதை தன்வந்திரி. அபிமான தேவதை தத்தாத்ரேயர். உபாசன தேவதை சுப்ரமண்யர். அதிஷ்டான தேவதை பிரம்மா.
சிவா பஞ்சாஷரம் "ஓம் நாம சிவாய"
இம் மந்திரம் ஐந்து அட்சரத்தோடு கூடியது. அநேக மஹா ரிஷிகளும், சித்தர்களும் முறையோடு ஓதி பிறவாத பெருவாழ்வு பெற்றுள்ளனர். மஹா மந்திரத்தில் மிகவும் முக்கியமானது. நன்கு வேதங்களின் சாரமாகும்.
அஷ்டாஷரம் - " ஓம் நமோ நாராயணா"
இந்த மஹா மந்திரம் திருமந்திரம், ஆதி நாராயண மந்திரம் எனப்படும். இதை ஆதியில் நாராயணமூர்த்தி வைகுண்டத்தில் மகாலக்ஷ்மி, கருடன், ஆதிசேஷன் மற்றும் விஷ்வக்சேனருக்கும் உபதேசித்தார். இதற்கு அதி தேவதை ஆதிசேஷன் உபாசனா தேவதை மகாலட்சுமி. அதிஷ்டான தேவதை ஸ்ரீமன் நாராயணன்.