கட்டுமரம்

கடல் அழைக்கும் போது போகணும்
கரை அழைக்கும் போது திரும்பணும்
நடுகடலில் வலை பாய்ச்சி நிற்கணும்
நின்று மீன்களின் சகவாசம் தேடணும்
மானுடம் மீனினம் இரண்டிற்கும்
பாலமாகி நிதமும் உழைக்கணும்
பசியாற ஒருபுறம் என் பயணம்
பிறவி கடன் தீர மறுபுறம் ஜனனம்