மனித நேயம் கொண்டவன்
நெல்லு வயல் களை கட்டி காத்து இருக்க
நெல் மணியால் பயிர்கள் எல்லாம் களைத்திருக்க
அறுவடையின் காலமோ நெருங்கி நிற்க
வயல்களில் இறங்கிய பெண்கள் கிராமத்து பண்ணில்
பாடல்கள் தொடங்கிட அறுவடையும் தானாக
நடந்தது இங்கே
பெண்கள் அணியணியாய்
வரி வரியாய், வயல்களிலே பயிர் அறுத்து
கட்டு கட்டாய் வயல் வெளியில் குவித்தனரே
நெற்கதிரும் வைக்கோலும் பிரித்தெடுத்து விவசாயி
கொண்டு சென்றான் வீட்டுக்கு
கொண்டு வந்த நெல் கண்டு பூரித்தாள் மனைவி
அவன்தானே மனம் குளிர
புத்தம் புது நெல் குற்றி அரிசி கொண்டு
புதிர் படைத்தாள் கணவனுக்கே
அவன் கொண்ட மகிழ்ச்சியினால்
உள்ளம் எல்லாம் நிறைந்து நின்றாள்
விவசாயம் விளங்கி விட்டால்
வறுமை இல்லை வெறுமை இல்லை
பாடு பட்ட விவசாயி நமக்கெல்லாம்
தந்து உதவும் செல்வம் உணவாகும்
மனிதருள் முதன்மை வாய்ந்தவன் விவசாயி
மனிதன் உயிரைக் காப்பவனே விவசாயிதான்
மக்கள் எந்த பதவியில் இருந்தாலும்
உண்ணும் உணவு விவசாயியின் கையாலே
அதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது
விவசாயி நீடூழி வாழ வேண்டும்
விவசாயம் ஓயாது தழைக்க வேண்டும்
மானம் உள்ளவன் விவசாயி
மனித நேயம் கொண்டவன் விவசாயி