தண்ணீர் மனிதன்

தனக்கும் பிறர்க்கும்,
வித்யாசம் காணாதவன் !
தனக்கான வாழ்வுமுறை,
தன் சொந்தம் என்கிறவன் !
மேகங்கள் கலையத்தான்,
என்றுமட்டும் நம்புகிறவன் !
தனிமை எனும் போர்வை,
தனக்கானது என்கிறவன் !
இருள்தரித்த நள்ளிரவில்,
பெருவெளிச்சம் காண்கிறவன் !
நெருக்கடிக்கும் ஜனத்திரளின்,
உட்புகுந்து மறைகிறவன் !
இனித்திருக்கும் பொழுதுகளை,
உவர்ப்புடனே மெல்கிறவன் !
தனக்கெடுத்து வைக்காமல்,
அத்தனையும் முடிக்கிறவன் !
தலைக்கனத்தை சூடாமல்,
தவிப்புகளை வடிக்கிறவன் !
எதிர்வினைகள் எடைபோட்டால்,
தயங்காது வெடிக்கிறவன் !
மனம் பொறுக்கா விளைவுகண்டு,
மதிகொதித்து துடிக்கிறவன் !
வேதனையின் உச்சத்தை,
வேலிகட்டி வைக்கிறவன் !
வேசம்கட்டும் மனிதர்களை,
ஊசிகொண்டு தைக்கிறவன் !
கூடுகட்டும் பொய்களிடை,
உண்மையென மொய்க்கிறவன் !
கேடுசெய்யும் ஊழ்வினைகள்,
கூறுகட்டி வைக்கிறவன் !
நூருபேர்கள் மத்தியிலே,
தானும் எங்கும் வருகிறவன்,
மாற்றம் தரும் சிந்தனைகள்,
மத்தியமாய் தருகிறவன் !
நேரம் காலம் கணக்கிட்டு,
தோல்வி மழை பெறுகிறவன் !
வேள்விசெய்து உதிரத்தில்,
உஷ்ணப்பட்டு உறைகிறவன் !
நாளை என்ன நிகழ்வென்று,
நினைக்காமல் மறைகிறவன் !
இன்று என்ன இயலுமென்று,
எண்ணங்கள் நிறைகிறவன் !
மாற்றமெங்கும் வேண்டுமென,
முயக்கித்து விரைகிறவன் !
தன்னலங்கள் பாராமல்,
பிறர்க்கென்றால் குறைகிறவன் !
எவறோடும் நலம் காணும்,
கண்ணீர் மனிதன் அவன் தண்ணீர் மனிதன் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Aug-15, 8:15 pm)
பார்வை : 133

மேலே