இலைகளும் சிறகுகளும்

..."" இலைகளும் சிறகுகளும் ""...
இலைகளும் சிறகுகளும்
இதமாய் கதை படிக்கும்
இனம்புரியா இன்பத்தின்
கிளிகளோடு கிளைகள் பேசி
கொக்கரிக்கும் குருவிகளை
ஆர்பரிக்கும் மரங்களிங்கு
கையதைத்தே அழைக்கிறது
வாருங்கள் அமருங்கள் !!!
பறவைகளே பறவைகளே
பறந்ததுபோதும் அமருங்கள்
உன் சிறகுகள் வலிக்குமே
என்ற ஆதங்கமில்லை
உன் செல்ல தீண்டலில்
சிலிர்க்கும் ஆசையில்
கையசைத்து அழைக்கிறேன்
வாருங்கள் அமருங்கள் !!!
உறவுகளை வலுப்படுத்த
உயரப்பறக்கும் குருவிகளே
மேகம் சுமந்த மழையால்
என் வேரதனை நனைத்தேன்
உங்களின் சங்கீத மழையில்
என் மனதை நனைந்திடவே
கையசைத்து அழைக்கிறேன்
வாருங்கள் அமருங்கள் !!!
கூடுகட்டி கூடிவாழும்
மனிதனின்று மறந்துவிட்ட
மனிதத்தின் மகத்துவத்தை
மனதினிலே பதிக்கவே
மரக்கிளையின் குருவிகளே
மரித்துவிடும் காலம்வரை
மகிழ்ச்சியாய் வாழ கற்றுத்தர
வாருங்கள் அமருங்கள் !!!
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...