முயல்கள்

"போடா சோமாறி!"

தன் பேருந்தை உரசிப் போகும் ஆட்டோக்காரனை நோக்கி கத்துகிறார் ஓட்டுநர். சிக்னலில் சிவப்பு விளக்கு எ¡¢யாவிட்டாலும் வாகனங்கள் மெதுவாகவே நின்று செல்கிறாற் போல் குறுகலாக அமைந்திருந்தது அந்தச் சாலை. மனிதர்களால் அவ்வாறு ஆக்கப்பட்டது என்றும் சொல்லலாம்.
நான் வழக்கம் போல் முண்டியத்து ஏறி எனக்கு பிடித்தமான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். காற்று வருவது ஒரு புறம் இருந்தாலும், ஜன்னலுக்கு வெளியே கலைடாஸ்கோப் போல காட்சிகள் டக்டக்கென்று மாறுவதையும், விதவிதமான மனித முக பாவங்களையும் கவனிப்பது என் வழக்கமான பொழுதுபோக்கு.

திருமணமான புதிதில் ஜன்னல் இருக்கையை நோக்கி நகரப் போன மனைவியை தடுத்து, 'அங்க நான் உக்காந்துக்கறேனே' என்று மெலிதாக கெஞ்சிய போது, குறுஞ்சி¡¢ப்புடன் நகர்ந்து எனக்கு இடமளித்தாள் அவள். 'புதுப்பொண்டாட்டியை விட்டுட்டு என்னத்த வேடிக்கை பாக்கப் போறார்' என்று சி¡¢ப்பு வந்திருக்கக்கூடும் அவளுக்கு.

இப்போதும் அதே மாதி¡¢ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் என்னை திடுக்கிட வைத்த அந்தக் காட்சியை சாலையில் பார்க்க நேர்ந்தது.
அதற்கு முன் அந்தப் பகுதியை சற்று விளக்கிவிடுதல் நலம். தினமும் அந்த பகுதியில் போக்குவரத்து நொ¢சலால் பேருந்து நெடுநேரம் நிற்கநோ¢டும் என்பதால் அந்தப் பகுதியை தெளிவாக நினைவில் இருத்திக் கொள்ள முடியும். தின,வார, மாத, பத்தி¡¢கை நடிகைகளின் இடைகளின் நடுவில் தொ¢யும் பெட்டிக்கடைக்காரனின் முகம். வியர்த்த உடலுடன் ஒரு ஆள் துணிகளை இஸ்தி¡¢ போட்டுக் கொண்டிருக்கும் சலவையகம், எப்போதும் பல் குத்திக் கொண்டே யாராவது வெளியே வந்துக் கொண்டிருக்கும் ஒரு மிலிட்டா¢ ஹோட்டல்........

அதற்கும் பக்கத்தில்தான் என்னை திடுக்கிட வைத்த காட்சி கொண்ட கடை.
'கவிதா கூல் ஸ்டோரேஜ்' என்று இறைச்சிகளை குளிர்பதனப் பெட்டியில் வைத்து விற்கும் கடை. வழக்கமாக வெளிநாட்டு குளிர்பானங்கள் அடுக்கி வைத்திருக்கும் அந்தக் கடையின் வெளியே ஒரு சிறிய கூண்டுக்குள் இரண்டு முயல்கள் இருந்தன. ஒரு அடி நீள அகலம் மட்டுமே கொண்ட அந்த சிறியக்கூண்டில் இரண்டு முயல்களுக்கு இடமில்லாமல் ஏறக்குறைய ஒன்றின் மீது ஒன்று படுத்திருந்தன.

நான் எப்பவோ ஒருமுறை தொலைக்காட்சியில் பார்த்த துறுதுறு, கொழுகொழு வெள்ளை நிற முயல்கள்தான் என் நினைவிற்கு வந்தன. ஆனால் இவையும் முழு வெள்ளை நிறத்திலிருந்தாலும் அவ்வளவு போஷாக்கில்லாமலும் சோங்கிப் போயுமிருந்தன. முயலை சமைத்து சாப்பிடுவார்கள் என்று நான் அறிந்திருந்தாலும் இறைச்சிக் கடையில் பார்ப்பது இதுதான் முதன்முறை என்பதால் அதிர்ச்சியாக இருந்தது.

விஷமக்கார குழந்தைகளை நினைவுப்படுத்தும் முயல்களை எப்படி வெட்டிக் கொன்று சாப்பிட மனசு வருகிறது என்று ஆதங்கமாக வருகிறது. விட்டால் ஒரு பொ¢ய தோட்டம் முழுக்க இங்குமங்கும் மருண்ட பார்வையுடன் ஓடி விளையாடும் முயல்களை ஒரு சிறிய கூண்டினுள் பார்க்க அவஸ்தையாயிருந்தது. சக மனிதனுடன் மற்ற உயி¡¢னங்கள் அனைத்தையும் அடிமைப் படுத்த நினைக்கும் மனித குலத்தை நினைத்து ஒரு கணம் ஆத்திரமாக வந்தது.

oOo

நானும் அசைவ உணவை சாப்பிடுபவன் என்றாலும் அதை நியாயப்படுத்த முயலாமல் ஒரு குற்ற உணர்ச்சியுடனே அதை ஒப்புக் கொள்வது வழக்கம். இதைப் பற்றிய விவாதங்கள் நண்பர்களிடத்தில் எழும் போது அதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிப் போய் விடுவேன். அசைவம் சாப்பிடும் குடும்பத்தில் பிறக்க நோ¢ட்டதால்தான் இதை சாப்பிட ஒப்புகிறது என்று என்னையே நான் சமாதானப்படுத்திக் கொள்வேன். இந்தப் பழக்கத்தை விட்டொழிக்கலாம் என்று நான் எடுக்கும் முடிவு, என் அம்மா கோழிக் கறிக்கு மசாலா அரைக்கும் வரைதான் நீடிக்கும். என்னதான் தினத்துக்கும் பருப்பு சாம்பார் வைத்தாலும் அசைவம் சமைக்கும் நாட்கள் மட்டும் ஒரு திருவிழா போலத்தானிருக்கும்.
சிறுவனாக இருந்த சமயங்களில்; என் அம்மா கோழிக்கறியோ ஆட்டுக்கறியோ வாங்கப் போகும் போது, அவள் வாங்கித்தரப்போகும் வேர்க்கடலைக்காக நானும் கூடப் போவது வழக்கம். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் இது நிகழும். ஞாயிற்றுக் கிழமையும் அசைவமும் என்பது ஒருமித்த ஒரு விஷயமாகவே என்னுள் எழும்.

அசைவம் விற்கிற அந்த சந்தை சூழலே எனக்கு அவ்வளவாக பிடிக்காது. காற்றெங்கிலும் கவுச்சி நாற்றமும் இரத்த வாடையும் கூடைக்கா¡¢களும் கூச்சலும் ஓலமும் என்னுள் ஒரு ஒவ்வாமையையே ஏற்படுத்தி இருக்கின்றன். அந்த இடம் வந்தவுடன் என் கால்கள் தாமாகத் தயங்க என் அம்மாவின் முறைப்பில் பலியாடு போல் பின்னாலேயே செல்வேன். ஏறக்குறைய எல்லா கடைக்களிலும் மீனை கையால் தூக்கிப் பார்த்து கூடைக்கா¡¢களுக்கு சமமாக கத்தி பேரம் பேசும் அம்மாவை அந்த சில கணங்களில் பிடிக்காமல் போவதுண்டு.
"என்னடா பாப்பார புள்ள மாதி¡¢ சிணுங்குற. ஆக்கி வெக்கும் போது மட்டும் லவுக்கு லவுக்குன்னு முழுங்கத் தொ¢யுதுல்ல. இதைப்புடி." என்று இறைச்சி அடங்கிய பையை என் கையில் திணிக்கும் அம்மா, ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி எல்லாம் வாங்கிய பின் என் முகச்சுளிப்பை சி¡¢ப்புடன் பார்த்துவிட்டு காய்கறி பையை என்னிடம் கொடுத்து விட்டு, இறைச்சிப் பையை அவள் வாங்கிக் கொள்வாள். 'கவுச்சிக்கு காத்து கறுப்பு எதுவும் பின்னால் வரக்கூடாது' என்று ஞாபகமாக துடைப்பக்குச்சி ஒன்றை பையினுள் வைத்திருப்பாள்.

அவள் இறைச்சியை சுத்தம் செய்யும் வரை நீடிக்கும் இந்த நாற்றமும் அருவருப்பும் குழம்புக்குள் போடப்பட்ட பிறகு எவ்வளவு இவ்வளவு வாசனையாக மாறுகிறது என்பது எனக்கு ஆச்சா¢யமாகவே இருக்கும். நாக்கில் குத்தி விடக் கூடாதென்று முள்ளையெல்லாம் நீக்கி விட்டு எனக்காக மீனை எடுத்து வைத்திருக்கும் அம்மாவை பழைய படி பிடிக்க ஆரம்பிக்கும்.

oOo

பேருந்து ஹாரன் ஒலியில் என் பழைய நினைவுகளில் இருந்து மீண்டெழுந்தேன்.
பேருந்து இன்னும் அதே இடத்தில்தான் நின்று கொண்டிருந்தது. எதிரே அந்த முயல்களை மறுபடியும் திரும்பிப் பார்க்க மனமில்லாவிட்டாலும் அனிச்சையாக திரும்பிப் பார்க்கவே நேர்ந்தது. அந்த முயல்கள் என்னையே பா¢தாபத்துடன் பார்க்கிற மாதி¡¢ உணர்ந்தேன். பிரமையோ? ஒரு கதாநாயகனை போல் பஸ்ஸில் இருந்து இறங்கி ஓடி, அந்தக் கூண்டை உடைத்தெறிந்து முயல்களை வெளியேற்ற ஆசை இருந்தாலும், கையாலாகதவனாய் பத்தி¡¢கைக் கடை போஸ்டர் நடிகைளை வெறிக்க ஆரம்பித்தேன். பேருந்து நகர்ந்து சென்று அந்த முயல்கள் என் கண்ணிலிருந்து மறையும் வரை அதைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

வீட்டிற்கு சென்ற பின்னரும் மனம் அந்த முயல்களையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. மனைவி, மகளுடன் கூட உரையாட விருப்பமின்றி சாப்பிட்டவுடன் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு சாய்ந்தேன். 'என்னங்க தலைவலிக்குதா?' என்று பா¢வுடன் கேட்ட மனைவிக்கு மெளனத்தையே பதிலாக தந்தேன். இவளிடம் இதைப் பற்றி சொன்னால் பைத்தியக்காரனை பார்ப்பது போல் பார்ப்பாளா என்று பயமாக இருந்தது. நாளைக்கு இதையே சொல்லி கிண்டல் செய்து சி¡¢க்க கூட நேரலாம். எதற்கு வம்பு?

ஏதோ என்னை கேட்க வந்த மகளை கூட என் மனைவி வாயில் உதட்டை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்ய, சின்ன வி~யத்துக்காக ரொம்பவும் உணர்ச்சிவயப்படுகிறோமோ என்ற சந்தேகம் எழுந்தது. வழக்கமாக காக்கா, நா¢ கதை சொல்லச் சொல்லி தூங்கும் மகள், அன்றைக்கு பார்த்து அம்மாவிடம் ஓரு முயல் கதை சொல்லும்மா என்று கேட்டது, தற்செயலா அல்லது எனக்கு மறைமுகமாக கடவுள் சொல்லுகிற செய்தியா என்று குழப்பமாக இருந்தது.

ஆயிரக்கணக்கான முயல்கள் என்னை துரத்திவர, ஒன்றை நான் ஆத்திரத்துடன் தூக்கியடிக்க, ஒன்று ஆவேசத்துடன் என்னை கடிக்க வர, அதன் ரோஜா நிற ஈறுகளை நான் ஆச்சா¢யத்துடன் பார்க்க, திடீரென்று பலத்த இடி சப்தம் கேட்க......

திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன்.

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. அந்த முயல்கள் நனைந்து கொண்டிருக்குமா? சேசே இருக்காது. கடைக்காரன் உள்ளே எடுத்து வைத்திருப்பான்.

oOo

மறுநாள் அந்த வழியாக செல்லும் பேருந்தில் ஏறாமல் வேறு மார்க்கமாக செல்லும் பேருந்தில் ஏறினேன். பைத்தியக்காரத்தனமாக இருந்தது. யா¡¢டம் இருந்து தப்பித்துக் கொள்ள இப்படி செய்கிறேன்? அந்த வாயில்லா ஜீவன்களிடமிருந்தா? அதை காப்பாற்ற இயலாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் என் மனச்சாட்சியிடமிருந்தா?

அலுவலகத்தில், தானாக படங்கள் மாறும் கணினியின் ஸ்கீ¡¢ன் சேவா¢ல் முயல்கள் படமும் ஒன்று வா¢சையில் வர, இதுவரை கண்ணில் படாத அந்தப் படம் இன்று என்னை ரொம்பவே உறுத்தியது. இதைப்பற்றி யா¡¢டமாவது சொல்லாவிட்டால் தலைவெடித்துவிடும் போலிருக்க, சீனியர் ஊழியரான சீனிவாசனை நெருங்கினேன்.

சீனிவாசனை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு மனிதனின் ஞாபகமே வராது. அந்த அலுவலகத்தில் உள்ள டைப்ரைட்டர், வாட்டர்கூலர், இன்னபிற அ·றிணைப் பொருட்களை பார்க்கிறாற் போலவே இருக்கும். 30 ஆண்டுகளாக யார் வம்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஜடம். உள்ளே கழட்டிப் பார்த்தால் பல்சக்கரமும், இரும்புமாக இருக்குமோ என்று கூடத் தோன்றுவது உண்டு.

அவா¢டம் உள்ள ஒரே கெட்ட வழக்கமான வெற்றிலை வாயுடன் 'இடிஇடி' யென சி¡¢க்க ஆரம்பித்தார்.

"இங்க மனுஷன் குண்டி கழுவக் கூடத் தண்ணியில்லாம் இருக்கான். நீரு என்னடான்னா........ முயலுக்கு போய்...................... சா¢யான ஆளுய்யா ....."

என்று விட்ட இடத்திலிருந்து சி¡¢க்க ஆரம்பித்துவிட்டு தன் பேரேடுகளில் தலையை நுழைத்துக் கொண்டார். அப்படியே ஒரு லெட்ஐரை எடுத்து அவர் மண்டையில் ஓங்கி அடித்து சாகடிக்கலாமா என்று ஆத்திரம் வந்தது. ஆனால் தான் கவலைப் பட்டுக் கொண்டிருப்பதே இரண்டு உயிர்களை காப்பாற்ற முடியவில்லையென்றுதானே என்று நினைக்க சி¡¢ப்பாகவும் இருந்தது.

அன்றைக்கு சாயங்காலமும் வேறு மார்க்க பேருந்தில் சென்று வீட்டை அடைந்தேன். நான் ஏதோ கவலையாகவே இருப்பதை கவனித்த மனைவி,

"என்னங்க பண்ணுது. டாக்டர் கிட்ட வேணா போலாமா?"

"இப்ப சும்மா இருக்கப் போறியா, இல்லியா" என்று நான் போட்ட காட்டுத்தனமான கூச்சலில் குடித்துக் கொண்டிருந்த வாட்டர் பாட்டலை நழுவ விட்ட மகள் மருண்டு போய் பார்க்க, மனைவி ஒன்றும் பேசாமல் சமைலறைக்குள் செல்ல என் மேலேயே ஆத்திரமாக இருந்தது. இவ்வளவு படித்தும் இரு வாயில்லா ஜீவன்களை காப்பாற்ற இயலாத குற்ற உணர்ச்சி என்னுள் நிரம்பி வழிந்தது.

அட! இப்படி செய்தால் என்ன?

திடீரென்று மண்டைக்குள் லூசாக ஆடிக் கொண்டிருந்த ஒயர் இணைப்பு பெற்றது போல் ஒரு யோசனை வந்தது.

அந்த முயல்களை நாமே விலை கொடுத்து வாங்கி விட்டால் என்ன?
வாங்கி?...... என்று என் இன்னொரு மனம் இன்னொரு உடுப்புடன் எதிரே நின்று கேட்க, திடீர் யோசனையின் மகிழ்ச்சி நீடிக்காமல் அபத்தமாக உணர்ந்தேன்.

நான் இருக்கும் அபார்ட்மெண்டில் நாய் வளர்க்கவே அனுமதி கிடையாது. சங்க செயலாளா¢டம் வேண்டுமானால் கேட்டுப் பார்க்கலாமா? அவர் ஒரு வேளை அனுமதித்தாலும் முயல்களை நம் வீட்டில் வைத்து சமாளிக்க முடியுமா? சமயத்தில் ஒரு நபர் அதிகமாக விருந்தாளியாக வந்து விட்டாலே படுக்க தர்மசங்கடமாக இருக்கிறது. அதற்கு ஆகும் செலவுகள்.... மகள் ஸ்கூல் கட்டுவதற்கே வங்கியில் இருக்கும் சொச்ச பணத்தையே நம்பியிருக்கிறேன்.
அன்று இரவு தூங்க நெடுநேரம் ஆயிற்று.

oOo

அதிகாலையில் மனைவி என்னை சந்தோஷப்படுத்தும் முயற்சியில் "என்னங்க, சாயந்திரம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சில்லி சிக்கன் வேணும்னா பண்ணட்டுமா?" என்று சமயா சந்தர்ப்பம் இல்லாமல் கேட்க

"போய் ஒழுங்கு மா¢யாதையா காப்பி எடுத்துட்டு வா."

'என்ன ஆச்சு இவருக்கு?' என்ற முணுமுணுப்புடன் அவள் விலக, நான் முயல்களை வாங்கி நாம் வளர்க்க என்னென்ன சாத்தியங்கள் உண்டு என்று யோசிக்க ஆரம்பித்தேன். சடாரென்று என் நண்பன் நாகராஜன் நினைவு வந்தது. அவர் வீடு தாம்பரம் வண்டலூர் ஜீ உள்ளே கொலப்பாக்கம் என்கிற இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டரை கிரவுண்டில் பொ¢ய வீடாக கட்டியிருக்கிறார். பின்பக்கம் பொ¢ய தோட்டம் இருக்கிறது. காய்கறி பயி¡¢ட்டு அவர் தேவைக்கு போக சமயத்தில் எனக்கு கூட ஒரு மூட்டையில் அனுப்பி வைப்பார், அவர் வாகனம் இந்த பக்கம் வரும் வேளையில்.
முயல்களை வாங்கி அவா¢டம் கொடுத்து வளர்க்கச் சொன்னால் என்ன? ஏற்னெவே சில வாத்துக்களையும், கோழிகளையும், கூண்டில் சில கிளிகளையும் வளர்க்கிறார். ஆனால் முயல் வளர்ப்பாரா? கேட்டுப்பார்க்கலாமா? அவர் மனைவி ஏதாவது சொல்லுவாரோ?

மனைவி குளியலறை செல்லும் வரை காத்திருந்து தொலைபேசியை எடுத்து சுழற்ற ஆரம்பித்தேன்.

விஷயத்தை கேள்விப்பட்ட அவர் "என்னங்க இதுக்கு போயி.... இதுக்கெல்லாம் கவலைப்பட்டிங்கன்னா உலகத்துல கவலைப்படறதுக்கு ஆயிரம் விஷயமாயிடும்." என்று இலவச புத்திமதி தர ஆரம்பிக்க "இல்லங்க. ரொம்ப உறுத்தலா இருக்கு" என்று பா¢தாபமாக ஆரம்பித்து "உங்களால முடியலன்னா சொல்லுங்க. நான் வேற இடத்துல விசா¡¢க்கிறேன்." என்று அதட்டலுடன் முடித்தேன்.

"சேச்சே. உங்களுக்கில்லாமயா. தாராளமா செய்யுங்க. அதுபாட்டுக்கு தோட்டத்துல ஒரு மூலைல இருந்துட்டுப் போவுது. முயல காதை புடிச்சு தூக்கணும். தொ¢யுமில்ல. இல்ல நான் வேணா அடுத்த வாரம் ஒரு ஆள அனுப்பவா?"
அடுத்த வாரம் வரை தாங்காமல் நான் செத்துப் போய்விடுவேன் என்று தோன்றியதால் "இல்லங்க. இன்னிக்கே கொண்டு வரேன். எனக்கு அங்க ஒரு வேலை இருக்குது."

முயல்களை காப்பாற்ற ஒரு வழி கிடைத்ததில் மிக சந்தோஷமாகி உடனே வாயில் விசில் புறப்பட்டது. ஆச்சா¢யமாக கவனித்த மனைவியின் பார்வையை தவிர்க்க முயன்றேன்.

oOo

இன்று அந்த கடை இருக்கும் பக்கம் செல்லும் பேருந்திலேயே ஏறி, அந்தக் கடை தொ¢யும் வகையில் நின்று கொண்டேன். மெதுவாக சென்ற பேருந்தின் வழியாக அந்தக் கடை தொ¢ய ஆரம்பிக்க இருதயம் ஒரு முறை நின்று துடித்தது. முயல்கள் இன்னும் சோகப் பார்வையில் ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டிருக்க, பக்கத்தில் ஏதோ கோஸ் இலைகள் மாதி¡¢ தூவப்பட்டிருக்க, ஆறுதலாய் உணர்ந்தேன்.

முயல்களே! கவலைப்படாதீர்கள். உங்கள் சிறைவாசம் இன்னும் சில மணிநேரம்தான். இன்று மாலைக்குள் உங்களை மீட்டு விடுவேன். அதுவரை சற்று பொறுத்திருங்கள்.

அலுவலகத்தை அடைந்ததும் பக்கத்து சீட்டில் சொல்லி விட்டு வங்கியை நோக்கி நடந்தேன். ஆமாம். இரண்டு முயல்களின் விலை எவ்வளவு இருக்கும்.? குழப்பமாக இருந்தது. நூறு ரூபாய்? இருநூறு? அட ஐந்நூறு ரூபாயே இருக்கட்டுமே. என்ன இப்ப? இந்த குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பித்தால் போதும். வங்கியில் என்னுடைய இருப்புக் கணக்கை விசா¡¢த்த போது குறைந்த பட்ச இருப்புத் தொகை போக சா¢யாக ஐந்நூறு மட்டுமே இருந்தது, எனக்கு ஏதோ செய்தி சொன்னாற் போல் இருந்தது. நான் சா¢யான திசையில்தான் போயக்கொண்டிருக்கிறேன்.

மகளுக்கு கட்ட வேண்டிய பள்ளி கட்டணம் நினைவுக்கு வர, அடுத்த மாதம் பைனுடன் கட்டி விட்டால் போயிற்று என்று என்னையே நான் சமாதானம் சொல்லிக் கொண்டேன். ஒரு மகத்தான கா¡¢யம் செய்யும் போது இம்மாதி¡¢யான இடைஞ்சல்கள் வரத்தான் செய்யும்.

இந்தக் கா¡¢யத்தை அலுவலகத்தில் யா¡¢டமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. கேனப் பயல்கள். சி¡¢ப்பார்கள். 'என்ன சார். சாயந்திரம் போய் ஒரு புல்லு வாங்கினோமோ, ஐ¡லியா இருந்தோமான்னு இல்லாம... ஐந்நுர்று ரூபாய வேஸ்ட் பண்றீங்களே' என்று இந்த குடிகார பீட்டர் சி¡¢ப்பான். வேண்டாம். இடது கை செய்கிற தானம் வலது கைக்கு கூட தொ¢ய வேண்டாம்.

மாலை மேனேஜா¢டம் சிறப்பு அனுமதி வாங்கிக் கொண்டு (மச்சினிக்கு சீமந்தம் வெச்சிருக்காங்க, சார். - மச்சினிக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை) படபடப்பான இதயத்துடன் பேருந்து ஏறினேன். நண்பர் வீட்டிற்கு சென்று முயல்களை கொடுத்துவிட்டு நான் வீடு திரும்ப எப்படியும் இரவு 11 ஆகிவிடும்.
முயல்களை எப்படி எடுத்துச் செல்வது? அவன் கூண்டோடு கொடுப்பானா? இல்லையா? குழப்பமாக இருந்தது. சா¢. அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று என்னை அடக்கிக் கொண்டேன். பேருந்தில் என் வீட்டருகே உள்ள நண்பரும் (என்ன சார் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பிட்டிங்க) ஏறி என் பக்கத்தில் அமர்ந்து அவர் வீட்டில் தண்ணீர் இல்லாத குறையை புலம்பிக் கொண்டே வர, நானோ அதில் கவனமின்றி அந்த முயல்கள் ஞாபகமாகவே இருந்தேன்.

"என்னங்க. இங்கேயே இறங்கறீஙக?" என்று அறுத்த நண்பா¢டம் "இங்க கொஞ்சம் வேலை இருக்கு" என்று அந்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன்னாலேயே இறங்கிக் கொண்டேன். அந்தக் கடை எதி¡¢லேயே கூட இறங்கலாம். பேருந்து மெதுவாகத்தான் போகும். இன்று பார்த்து விரைவாக போய்விட்டால் என்ன செய்வது? சாலை வேறு காலியாகவே இருந்தது.

அந்தக் கடையை நோக்கி நகர நகர, மனம் இது வரை யோசித்ததையெல்லாம் ஒரு முறை ரீவைண்ட் செய்து பார்த்தது.

இது போல ஊ¡¢ல் உள்ள முயல்களை எல்லாம் காப்பாற்ற இயலுமா? என்னமோ ஊரில் நீதான் ஜீவகாருண்யம் மிக்கவன் போல் நடந்து கொள்கிறாயே? இதுவரை எத்தனை கோழி, ஆடுகளை விழுங்கியிருப்பாய், அதெல்லாம் உயிர்கள் இல்லையா? மகள் பிறந்த நாளைக்கு இருநூறு ரூபாய்க்கு கவுன் வாங்க மூக்கால் அழுதவன், இதுக்கு ஐநூறு ரூபாய் செலவு செய்வாயா?

என்று பல்லாயிரம் கேள்விகள் கேட்ட மனதை

இல்லை. இதுதான் முதலும், கடைசியும். இதுவரை எப்பவாவது இப்படி தோணியிருக்குதா? இனிமேல் அசைவம் சாப்பிடுவதை கூட விட்டுவிடுவேன். ஒரு உயிரை உருவாக்க முடியாத மனிதனுக்கு கொல்ல எந்த உரிமையும் கிடையாது.

என்றெல்லாம் இரட்டைநிலையில் யோசித்தபடி, மோதியிருக்க வேண்டிய பைக்காரனை மயிரிழையில் தவிர்த்தேன்.

"பாத்துப் போங்க சார்."

அந்த கடையை நெருங்க நெருங்க ஒரு நல்ல காயம் செய்யப் போகும் மகிழ்ச்சியில் மனது நிறைந்தது. இதுவரை செய்த பாவத்திற்கெல்லாம் இந்த காயம் ஒரு வடிகாலாக இருக்கப் போகிறது.

அந்த கடையை மிகவும் நெருங்கி விட்டேன்.

ஆனால் என்னை திடுக்கிட வைக்கும் வகையில் அந்த முயல் கூண்டு காலியாக இருந்தது.

(நன்றி: சுரேஷ் கண்ணன் )

எழுதியவர் : வலைப்பதிவில் எடுத்து பரி (31-Aug-15, 11:14 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 149

மேலே