குழப்பம்

உன்னைப் பற்றியதொரு
ஹைக்கூவை எழுத யத்தனித்து,
எழுத அமர்ந்தேன்.
அது தினத்தந்தியின்
கன்னி தீவாய்
வளர்ந்து, வளர்ந்து
நீண்டதொரு
புதினத்தில் போய்
முடிந்தது!
"எனக்கு ஹைக்கூ கைவரவில்லையா?
இல்லை
உன் சிறப்பை ஹய்க்கூவிற்குள்
அடக்க முடியாதா??"
இந்த கேள்விக்கு
விடை தெரியாமல்
குழம்பி,
எழுதிய புதினத்தையே
திருப்பி திருப்பி
பார்க்கிறேன்
நான்!