இனிமையான பயணம் இது

பயணங்கள் எத்தனை
அழகானது என்பதை
தீர்மானிப்பது பயணப்படும்
சூழ்நிலை தான்...
நெரிசல் இல்லா
பேருந்தில் ஜன்னல் ஓரத்தில்
இருக்கை அமைந்துவிட்டால்
பயணம் கசக்கவா செய்யும்...
இனிமையான தென்றல்...
கருமை சூழ்ந்த வானத்தில்
ஒற்றை விளக்காய் நிலவு..
மெல்லிசை ஒலியில்
ஊஞ்சலாய் மிதந்து போகும்
பேருந்து...
தூக்கம் தழுவாத
விழிகள்...இரைச்சல்
இல்லாத அக்கம்பக்கம்...
இருளிலும் நிழலாய்
எதிர்புறத்தில் ஓடிகொண்டிருக்கும்
பசுமையான மரங்கள்...
காற்றோடு கலந்த
சின்ன சின்ன தூறல்...
கைகள் இறுக்கமாக
அணைத்துக்கொண்டு
தலை பதிக்க
சிறிய துணிபை...நினைத்து
பார்த்து சிரிக்கும்படியான
சில இனிய நினைவுகள்..இவை
அத்தனையையும் ரசித்து
கிறங்கும் கவித்துவமான மனது ....
இப்படி ஒரு
பயணம் வாய்த்துவிட்டால்
ஆயிரம் கவிகளைகூட
இனிக்க இனிக்க
படைத்துவிடலாம்...தனிமையைகூட
இனிமையாக்கிவிடும்
பயணங்கள் அது...நினைவுகளோடு
நீங்காமல் இடம்பெறும் இப்படிப்பட்ட
பயணத்தை எட்டிபிடித்த
அத்தனை பேரும்
அதிர்ஷ்டசாலிகள் தான்...
ரசனைகளோடு இணைந்த
அதிர்ஷ்டசாலிகள்...

எழுதியவர் : இந்திராணி (2-Sep-15, 4:48 pm)
பார்வை : 1778

மேலே