கலங்குது மனம்
வானம் கொஞ்சம், பூமி கொஞ்சம்
டச்சானாலே முழு ப்ரபஞ்சமும் அழியுமே
ஆறு என்ன, அய்ந்து என்ன
எல்லாவுயிரும் உலகைவிட்டு ஒழியுமே
அதுவரை
கள்ள நெஞ்சம், நொள்ள நெஞ்சம்
கர்வம் படைத்த திமிர் நெஞ்சம் – நிலைக்குமே
ப்ரபஞ்சம் இருக்கும்வரை நிலைக்குமே
அதனால்
நல்ல நெஞ்சம், வெள்ள நெஞ்சம்
நன்மை செய்யும் தங்க நெஞ்சம் – கலங்குதே
ப்ரபஞ்ச போலிகளை நினைத்து கலங்குதே
தொட்டில் பிள்ளையும் வட்டில் கழுவும் தேசம் – இங்கு
பாட்டிலை கண்டால் தானாய் பிறக்கும் பந்த பாசம்
கட்டிலுக்கு சொந்தமானவள் காத்துக் கிடக்க
பீச்சில் காதகியோடு காத்து வாங்கி உலாத்தும்
இளைய தலைமுறை மதுவுக்கு அடிமை
ஆவதிலிருந்து காப்பது யார் கடமை ?
புதிய தலைமுறையை காக்கின்ற உரிமை
ஆள்வோரின் தலையாய கடமை !
வாழும் உலகில் பாவப்பட்ட கூலிகளே
கூன் விழுந்து கலையிழந்து போயினரே
கூலி கொடுக்க கோபப்படும் கருங்காலிகளே
கூலிகள் வயிறெரிந்தால் உமக்கு சாபங்களே
மதமென்னும் போர்வையிலே புகுந்துக்கொண்டு
மதசார்பற்ற மனிதரென்று கூறலாமா..?
இனக் கலவரமே பணியாக ஏற்றுக்கொண்டு
ஈன ஜாதிகளே இல்லையென்று முழங்கலாமா ?
இந்தியர் என்ற பெருமை ஒன்றே –
எல்லோர் நெஞ்சிலும் எரியனும் நன்கே
தமிழன் என்பவன் அறிஞன் என்றே
அனைவரும் புகழுனும் அகிலமெங்கே..!
சமூதாயத்தில் சாதிய சாயம் பூசுபவனை
சாக்கடை அகழியில் போட்டு முழ்கவை
சமதர்ம சமூதாயம் தழைக்க - அவனை
சரித்திர பாடங்களை படிக்க வை..!
வாருங்கள் தோழர்களே ஊரெங்கும் உழைக்க..!
ஒன்று கூடுங்கள் தோழர்களே நல்லறம் சமைக்க.