கணவனை இழந்த தோழி கண்ணீருடன் மனைவி
சிறு வயதிலேயே நான் எனது தாயிழந்து தந்தையிழந்து
தெருவோரம் திருவோடேந்தி பிச்சையெடுத்த என்னை அன்னையாயிருந்து செல்வந்கனாய் மாற்றியது என் தோழியே
ஆனால் அவளின் நிலையோ இன்று பரிதாபம்
அவள் காதிலலே வீழ்ந்து காதலினிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு
வேறு ஒருவருடன் கட்டாய திருமணம் முடிக்கப் பட்டு
சிறு காலத்திலேயே அவள் கணவனும் மரணிக்க படவே நாளும் உறவினர்கள் அவளை ஏசவே
துன்பம் தாங்காமல் துயரம் பொருக்காமல்
உடன்கட்டை ஏறச் சென்றவளை என்னுடன் வா என்று என் இல்லத்தில் அடைக்கலம் புகுத்தினேன் ஆனால்
என் இல்லத்தில் புகுந்தவள் இல்லற வாழ்விலும் புகுந்திடுவாலோ என்று அஞ்சுகிறாள் என் மனைவி
இவ்வாறாக
கணவனை இழந்த தோழி கண்ணீருடன் மனைவி என்று
எங்களது வாழ்விலும் என்றாவது விடியல் வரும் என்று காத்துள்ளோம்